இளம்வயது பெண்களின் உடல்நலத்தை காக்க!…

சிறுவயதில் நமது இல்லங்கள் மற்றும் இல்லங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் எள்ளு மிட்டாய்., எள்ளுருண்டை போன்ற எள்ளினால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு இருப்போம். நமது இல்லத்திலும் நமது அம்மா எள்ளு பொடி மற்றும் எள்ளு துவையல் போன்ற பொருட்களை செய்து வழங்கியிருப்பார்.

அன்றைய நேரத்தில் கிடைக்கும் எள்ளு உணவு பொருட்களை சாப்பிட்டு வந்த நாம்., இப்போது அதிக அளவில் சாப்பிடுகிறோமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அந்த வகையில் எள்ளில் இருக்கும் மருத்துவ பலன்கள் மூலமாக நமது உடலுக்கு முக்கிய பங்காற்றுகிறது.

எள்ளை தினமும் பெண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயானது தடுக்கப்படுகிறது. மேலும் ரத்த நாளத்தில் இருக்கும் புற்று நோய் செல்களை வளர விடாமல் பார்த்துக் கொள்கிறது.

இதன் மூலமாக மார்பக புற்றுநோய் மட்டுமின்றி பெருங்குடல் புற்றுநோய்., கல்லீரல் புற்றுநோய் போன்றவை தடுக்கப்பட்டு., எள்ளில் இருக்கும் மகத்துவங்கள் காரணமாக உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது.

நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்திருக்கிறது. எள்ளில் கருப்பு நிற மற்றும் வெள்ளை நிறத்தில் எள் இருக்கிறது., இந்த இரண்டில் எது ஆற்றல் மிக்கது என்று கேட்டால் கருப்பு நிறத்தில் இருக்கும் எள் தான் அதிக மருத்துவ குணம் பெற்று என்று கூறப்படுகிறது. வெள்ளை நிற எள்ளை விட அதிகளவு ஊட்டச்சத்து., புரதச்சத்து., இரும்புச்சத்து., வைட்டமின் பி மற்றும் வைட்டமின் எ இருக்கிறது.

இதன் மூலமாக ஞாபக மறதி போன்ற பிரச்சனை குறைகிறது., கல்லீரலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் போன்றவற்றை சுத்தம் செய்யப்படுகிறது., செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு இந்த எள்ளை தினமும் அரை தே.கரண்டி சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறு பிரச்சனை நீங்கும். மருத்துவரிடம் அணுகி ஆலோசனை பெற்ற பின்னர் எள்களை சிலர் சாப்பிடுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *