பல நோய்களுக்கு மருந்தாக பூண்டு!..

 சிறுகட்டிகள், காது மந்தம், நாள்பட்ட இருமல், இரைப்பு, வயிற்றுப் புழுக்கள், வாத நோய்கள், வாய்வு தொல்லை, தலைவலி, ஜலதோஷம், சீதக் கழிச்சல் போன்றவற்றை பூண்டு குணமாக்கும்.

 பூண்டை நசுக்கி அதன் சாற்றை 2 துளி அளவு ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் 3 நாள்கள் வரை காதில் விட்டு வந்தால் காதுவலி குணமாகும்.

 பூண்டு, மிளகு, கரிசாலை இலைகள் இந்த மூன்றையும் சம அளவு எடுத்துக் கொண்டு அரைத்து பசையாக்கி எலுமிச்சம் பழ அளவு ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின்னர் சாப்பிட்டால் வயிறு உப்புசம் சரியாகும்.

 50 கிராம் உரித்த பூண்டை நசுக்கி 1 லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் இட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அந்த எண்ணெய்யை வலி உள்ள இடத்தில் தடவி வர வாதநோய்கள் குணமாகும். பூண்டு சாறு 10 துளிகள் அளவு இரவு உணவுக்குப் பின்னர் சாப்பிட வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.

 பூண்டு எண்ணெய் கக்குவான், குடல் புண், மலேரியா, யானைக்கால், ஆஸ்துமா ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. மேலும் இது ரத்த அழுத்த நோயையும் குணப்படுத்தும்.

 வலியைப் போக்கும். வாயுப் பிடிப்பை நீக்கும் தன்மை உடையது. பூண்டில் புரோட்டின் சத்து, கொழுப்புச்சத்து, தாதுக்கள், நார்ச்சத்து கார்போஹைட்ரேட்ஸ் உள்ளது. மேலும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன. பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே ஆகும்.

 பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும். பால், பூண்டு, தேன் கலவையை தினமும் பருகி வந்தால் வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும், மூட்டுவலி உள்ளவர்களுக்கு நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *