பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க பருப்புக் கீரை!..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை. இது ரத்தத்தை சுத்தப்படுத்தி நீண்ட கால நோய்களின் தாக்கத்தைக் குரைக்கக்கூடியது. பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்வது.

பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிடுவது உடலில் உல்ள கெட்ட கொழுப்பை அகற்ற உதவும். அடிக்கடி பருப்புக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு உடல் சூடு தணியும். மலச்சிக்கல் நீங்கும்.

வெயில் காலத்தில் உண்பதற்கு ஏற்ற் கீரை இது. பருப்புக் கீரை மசியலுடன் நீராகாரம் சேர்த்து சாப்பிட்டு வர வெயில் காலத்தில் ஏற்படுகிற உடல் சூடு நீர்க்கடுப்பு வியர்க்குரு வேனல்கட்டிகல் போன்ரவை தவிர்க்கப்படும்.

அதே போல கிராமங்களில் வெயில் காலத்தில் ஏற்படுகின்ற அம்மை மற்றும் அக்கி பிரச்சனைகளுக்கும் பருப்புக் கீரையை மருந்தாக பயன்படுத்துகிரார்கள்.

பருப்புக் கீரையை நன்கு அரைத்து அக்கி வந்த இடங்களில் மேல்பூச்சாகத் தடவி வந்தால், கொப்புலங்கள்மறைந்து உடல் குளுமையடையும்.

பருப்புக் கீரையில் உள ஆக்சாலிக் அமிலம் சிலருக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகக் காரனமாகலாம். எனவே சிறுநீரகக் கல் மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பருப்புக் கீரையைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.

பாலுட்டும் தாய்மார்களுக்கு சிறந்த ஊட்ட உணவு. பித்தம் அதிகம் உள்ளவர்கள். அடிக்கடி தலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்றது. கல்லீரல் நோய்கள் தீரும்.

ஒமேகா 3 உள்ள அற்புதக் கீரை பருப்புக் கீரை. கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் பருப்புக் கீரையைப் பயன்படுத்தினால் எளிதில் கால்சியம் கிடைக்கும்.

பருப்புக்கீரையில் அபரிமிதமான அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. இவை நுரையீரல் பாதிப்புகளில் இருந்து காக்கக்கூடியவை.

மலச்சிக்கலைப் போக்குகிறது, குடற்புழுக்களை அகற்றுகிறது. இரைப்பையில் மிகுதியாக சுரக்கும் அமிலம் காரணமாக ஏற்படும் நெஞ்செரிச்சலை போக்குகிறது.

தலைவலி உள்ளவர்கள் பருப்புக் கீரையை மைபோல் அரைத்து தலைக்கு பற்றுப்போட்டல் தலைவலி போகும். பருப்புக் கீரையில் உள்ள ஆக்சாலிக் அமிலம் சிலருக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகக் காரணமாகலாம்.

வேர்வை கொப்பளங்கள், வெந்நீர் கொப்பளங்கள், தீக்காய கொப்ளங்களுக்கும் இக்கீரையை அரைத்து தடவலாம். உடலில் உள்ள கொழுப்பு கரையும்.

இக்கீரையின் விதைகளை 4 கிராம் அளவிற்கு எடுத்து நன்றாக தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து இளநீரில் போட்டு பருகினால் சீதபேதி நிற்கும். வயிற்று எரிச்சல், சிறுநீர் எரிச்சல் போகும்.

உண்ணக் கூடாதவர்கள்: சிறுநீரகக் கோளாறுஉள்ளவர்கள். பித்தப் பையில் கல் உள்ளவர்கள். அதுவும் மிளகு அதிக அளவு சேர்த்து உண்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *