நம்முடைய உயிரையே பறிக்கும் அளவுக்குக் காடுமையான மோசமான ஐந்து பழக்கங்கள் இருக்கின்றன என்ன தெரியுமா அவை?

நம்முடைய முன்னோர்கள் காலத்திற்கும் தற்போதைக்குமான தொழில்நுட்ப வளர்ச்சியை நம்மால் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள தொடர்பைப் போல இருக்கும். உடனே ஆம் என்று தலையாட்டி நீங்கள் கெத்தெல்லாம் காட்டத் தேவையில்லை.

தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள் எந்த அளவுக்கு வளர்ச்சிக்கு பெற்றிருக்கின்றனவோ அதைவிடப் பல மடங்கு அசுர வேகத்தில் நமக்கான பிரச்சினைகளும் நம் கண் முன்னே 24 மணி நேரமும் காத்துக்கொண்டே தான் இருக்கின்றன.

பழக்க வழக்கம்

தொழில்நுட்பமும் அறிவியல் வளர்ச்சி மட்டும் மாற்றமடையவில்லை. அதையும் தாண்டி, இன்றைய காலக்கட்டத்திலும் நம்முடைய வாழ்க்கை முறை, பழக்க வழக்கம், உணவு முறை ஆகியவை எல்லாமே தான் மாறிப்போயிருக்கின்றன. காலத்தின் கட்டாயத்தில் அதன்கூடவே சேர்ந்து நாம் சிலவற்றைக் கொள்வதில் தவறில்லை. ஆனால் அது இயற்கைக்கும் நமக்கும் நம் சந்ததிகளுக்கும் எதிரானதாக மாறிவிடக் கூடாது என்பதில் முழு கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமல்ல. அந்த வகையில் நம்முடைய உயிரையே பறிக்கும் அளவுக்குக் காடுமையான மோசமான ஐந்து பழக்கங்கள் இருக்கின்றன. அந்த பழக்கம் இருப்பவர்களுக்கு ஆயுள் மிகக் குறைவு. அது அவர்களை அழித்தே விடும் என்று சொல்வார்கள். அப்படியென்ன பழக்கங்கள் அவை என்று பார்க்கலாம்.

சர்க்கரை சேர்த்தவை

சர்க்கரைப் பொருள்கள் அதிகம் சேர்க்கப்பட்ட பானங்கள் மற்றும் உணவுப் பொருள்களை அதிகமாக சாப்பிடுகிறவர்கள், குறிப்பாக சர்க்கரை சேர்த்து பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களைச் சாப்பிடுகிறவர்கள் மிக விரைவில் எலும்புகள் பலமிழக்கும். அது உயிரையே பறிக்கும் ஆபத்து கொண்டது என்று குறிப்பிடப்படுகிறது. நாம் தான் அதைப் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கிறோம். இது வெறும் தகவல் மட்டுமல்ல. நிரூபணம் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவு.

உட்கார்ந்திருத்தல்

நீண்ட நேரம், நாள் முழுக்க ஒரே இடத்தில் உட்கார்ந்திருத்தல், உடலுக்கு அதிகமாக அசைவில்லாமல் அமைதியாக இருப்பது, கம்ப்யூட்டர் முன்னாடியே உட்கார்ந்து கொண்டு வேலை பார்ப்பது, அதற்கேற்ற படி ஜீரணசக்தி கொண்ட உணவுகளைச் சாப்பிடாமல் இருப்பது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. இவையெல்லாமா கூட மனிதனுக்கு மரணத்தை சேகமாக வரவைக்கும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல் என்பது மிக மிக கொடிய விஷயம். புகைப்பிடித்தல் என்பது ரத்தப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஆகிய நோய்களை ஏற்படுத்தும். புகைப்பிடித்தல் என்பது புகைப் பிடிப்பவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும் கெடுதல். சிகரெட்டில் இருக்கின்ற நிக்கோடின் இதயத்தில் அடைப்பை ஏற்படுத்தும் அளவுக்குக் கொடுமையானது.

உடல் பருமன் (அ) குறைந்த எடை

உடல் எடை என்பது நம்முடைய ஆரோக்கியத்தையும் ஆயுளையும் நிர்ணயிக்கும் விஷயத்தில் மிக மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் பருமன் தான் இதயம் சம்பந்தப்பட்ட நோய், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரகம், நுரையீரல்ஈ நீரிழிவு நோய் என எல்லா வகையான நோய்களுக்கும் அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக அது இருக்கிறது. அதனால் தான் உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் மிக இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. அது மிக வேகமாக உயிரைக் குடிக்கும் அரக்கன் என்றே கூட சொல்லலாம்.

மது அருந்துதல்

சிலருக்கு சாயங்காலம் ஆறு மணி ஆகிவிட்டாலே கால்கள் டாஸ்மார்க் பக்கமாகத் தான் போகும். அந்த மதுப்பழக்கம் தான் இளம் வயதிலேயே நிறைய பேருடைய வாழ்க்கையையும் கெடுத்து விட்டது. இந்த ஐந்து பழக்கங்களும் கொண்டவர்கள் மிக இளம் வயதிலேயே உயிரைப் பறிக்கின்ற கொடுமையான பழக்க வழக்கங்களாக இருக்கின்றன. அதனால் இந்த ஐந்து பழக்க வழக்கங்களையும் விட்டு விடுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *