மனிதன் நலமாக வாழ நோய் நொடியின்றி மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் இன்றி நலமாக இருக்க வழிகள்….

மனஅழுத்தம், ஓய்வின்றி பணி செய்தல், உடற்பயிற்சியின்மை, உணவு கட்டுப்பாடு இன்மை, தீய பழக்கங்கள் ஆகியவை நிம்மதியான வாழ்வை கெடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

நிம்மதியான வாழ்வை கெடுக்கும் பழக்கங்கள்

மனிதன் நலமாக வாழ நோய் நொடியின்றி மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் இன்றி நலமாக இருக்க வேண்டும். இன்றைய உலகு மிகவும் வேகமானதாக இருக்கின்றது. எதற்கெடுத்தாலும் அவசரம். இத்தகைய சூழலில் இருந்து கொஞ்சம் விடுபட்டு மனிதன் மாறவேண்டும். மனஅழுத்தம், ஓய்வின்றி பணி செய்தல், உடற்பயிற்சியின்மை, உணவு கட்டுப்பாடு இன்மை, தீய பழக்கங்கள் ஆகியவை நிம்மதியான வாழ்வை கெடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

மன அழுத்தம்

சிறு சிறு விஷயங்களைப் பெரிதுபடுத்தி தேவையில்லாமல் கவலைப்பட்டு மனஅமைதியைப் பாதிக்க வைப்பதால் வருகின்ற மனஅழுத்தம் நிம்மதியைக் குலைக்கின்றது. மன அழுத்தத்தினால் நிம்மதியாக தூங்க முடிவதில்லை. இரத்த அழுத்தம் கூடுகின்றது. மன அழுத்தத்தை கட்டுப்படுத்த தியானம் மற்றும் யோகா உதவுகின்றன.

யோகாவினால் ஏற்படக்கூடிய நன்மை மனித சமுதாயத்திற்கு மிகவும் முக் கியம். யோகா மனதையும், உடலையும் அமைதியாக்கு கிறது. மனத்தாக்கத்திலிருந்து மனிதனை விடுபட வைக்கிறது. உன்னதமான நீண்ட நல்வாழ் விற்கு வழிவகுக்கிறது. தினமும் சிறுது நேரம் யோகா மற்றும் தியானம் தவறாமல் செய்துவந் தால் மன அழுத்தம் குறைந்து நிச்சயம் நிம்மதி உண்டாகும்.

எத்தகைய பணியில் இருந்தாலும் மனிதனுக்கு ஓய்வு மிகவும் அவசியம். உடல் உறுப்புகளுக்கும், மூளைக்கும் ஓய்வு தேவை. சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் குறைந்தது 30 நிமிடம் ஓய்வு புத்துணர்ச்சியை தர வல்லது.

உடற்பயிற்சி

காலை நேர நடை பயணம், மிதமான உடற்பயிற்சி நாள் முழுவதும் சுறுசுறுப்போடு பணி ஆற்ற உறுதுணையாக அமைகின்றது. சர்க்கரை சத்து அதிகம் உள்ளவர்கள் காலை நடைபயணம் அவசியம் மேற்கொள்ள வேண்டும். ரத்தத்தில் உள்ள அதிக அளவு சர்க்கரையை கட்டுப்படுத்த இத்தகைய நடைபயணம் மற்றும் உடற்பயிற்சி உதவுகின்றது.

நடைபயிற்சியை காலையில் செய்ய முடியாதவர்கள் மாலையிலும் செய்யலாம். வெளியில் சென்று பூங்கா, சாலை ஓரம் மற்றும் மைதானங்களில் நடைபயிற்சி செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே அவரவர் வசதிக்கேற்ப சாதனங்கள் மூலம் பயிற்சி மேற் கொள்ளலாம். நடை மற்றும் உடற்பயிற்சி உடல் பருமனை குறைக்க மிகவும் உதவுகின்றன. ஆரம்பத்தில் காலை வேளையில் நடப்பது மிகவும் சிரமமாக தெரியலாம். அதுவே கொஞ்சம் பழகி விட்டால் தினமும் காலைக்கடன்கள் மாதிரி ஒரு நாள் நடைபயிற்சி இல்லா விட்டால் எதையே பறிகொடுத்த மாதிரி தோன்றும்.

நமது முன்னோர்கள் நம்மை நடக்க வைக்க கோவில்கள் கட்டி வலம் வரச் செய்தனர். மலைக்கோவில்களில் கிரிவலம், நடைபயணமாக செல்லுதல் ஆகியவை நமது உடல் ஆரோக்கியமாக அமையச் செய்த ஏற்பாடுகளாகும். ஆக நடை மற்றும் மிதமான உடற்பயிற்சி சிறந்த ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவை.

உணவுக்கட்டுப்பாடு

உண்டு சுருங்குதல் வெண்டிற்கு அழகு எனது முதுமொழி. உண்டி சுருங்குதல் வெண்டிற்கு மட்டுமல்ல அனைவரும் சிறந்தது. சைவ உணவே சாலச்சிறந்தது. இன்றைய உலகில துரித உணவு, பொறித்த உணவு மற்றும் தந்தூரி உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மக்கள் விரும்பி வேண்டி இந்த வகை உணவுகளை அருந்தி வருகின்றன. இத்தகைய உணவு வகைகள் ஆரோக்கியக் கேட்டினை விளைவிக்க வல்லவை.

பச்சைக் காய்கறிகள் கூட்டு (Vegetable Salad) சாப்பிடுவதால் உடம்பிற்கு எவ்வித கேடும் வருவதில்லை. வேக வைத்த காய்கறிகள், பழவகைகள் மனித ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நீரின்றி அமையாது உலகு என்பது முதுமொழி. நீரின்றி மனித உடம்பும் அமையாது. தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் அருந்துவது நலம். பால் மனித சமுதாயத்திற்கு இயற்கை தந்த வரப்பிரசாதம். மிகச்சிறந்த உணவு, பாலைத்தவிர்க்கவே கூடாது. பால் குழந்தை முதல் பெரியோர் வரை அருந்த வேண்டிய ஒன்றாகும். ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்களும், சர்க்கரை நோய் உள்ளவர்களும் கிழங்கு வகைகளை தவிர்ப்பது நல்லது.

கீரை வகைகள், கேரட், பட்டாணி, பாசிப்பயறு, வாழைத்தண்டு, கொண்டை கடலை ஆகியவற்றை உணவில் சேர்ப்பது நலம். உணவு இடை வேளைகளில் நொறுக்குத்தீனி தவிர்ப்பது நல்லது. மனிதன் நலமாக வாழ நோய், நொடியின்றி மனஅழுத்தம் மற்றும் மன உளைச்சல் இன்றி இருக்க வேண்டும்.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு என்றார் வள்ளுவர்.

* சுத்தம் சுகம் தரும் என்பது முதுமொழி

* உணவருந்துவதற்கு முன்பாக கைகளை சுத்தமாக கழுவிய பின்பே உணவருந்த வேண்டும். இந்தப் பழக்கத்தினை சிறுவயது முதலே நாம் கற்றுத்தர வேண்டும்.

“நொறுங்கத்தின்றால் நூறு வயது” என்று கூறுவார்கள். இன்றைய வேக உலகில் சாத ரணமாக தின்பதற்கே நேரம் கிடைப்பதில்லை. காலையில் பணிக்கு செல்வதற்கு முன் ஒரு வாய், இரண்டு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு செல்கின்ற நிலை தான் உள்ளது. இதைச்சற்றே மாற்றி நிதானமாகச் சாப்பிட முயற்சி செய்ய வேண்டும். மாலை சிற்றுண்டியாக வேகவைத்த கடலை வகைகள், பாசிப்பயறு அல்லது ராகி உப்புமா நல்லது. அசைவ உணவில் மிகவும் சிறந்தது, மீன் புரோட்டின் நிறைந்தது. கொழுப்பு இல்லாதது. பொறித்த மீனை விட வேகவைத்த மீன் சாலச்சிறந்தது.

முட்டை

மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது. பொறித்த மாமிச வகைகள் கொழுப்பு சத்தினை கூட்ட வல்லது. கொழுப்புச் சத்து (கொலஸ்ட்ரால்) அளவு கூடக்கூட ரத்த நாளங்களில் அடைப்புக்கு வழி கோலுகிறது. குறிப்பாக இதய நாளங்களின் அடைப்பு மனித உயிருக்கு கேடு விளைவிக்கக் கூடியதாக அமைந்து விடுகிறது. அரிசியை குறைத்து, காய்கறிகளை கூட்டி, ராகி, கோதுமை வகை களை சேர்த்து பொறித்த உணவு வகைகளை தவிர்த்து சாப்பிடப் பழகி வந்தால் ஆரோக்கிய வாழ்வு நிச்சயம்.

சர்க்கரை நோய்

இன்றைய உலகில் அதிகம் பேர் இந்நோயினால் அவதிப் படுகின்றனர். சர்க்கரை நோயி னால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் முதலிடம் வகிப்பது இந்தியா அடுத்து சீனா, மூன்றாம் இடத்தில் அமெரிக்கா உள்ளது. 2030-ம் ஆண்டு இந்த எண்ணிக்கையில இரண்டு மடங்குக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிமாக உள்ள நிலைப் பாடு சிறுநீரகம், இதயம், கண், ரத்த நாளங்கள், நரம்புகள் ஆகிய உறுப்பிகளை மிகவும் பாதிக்கப்படக்கூடியவை ஆகும்.

சிறுநீரகத்தை சிறிது சிறிதாக செயலிழக்கச் செய்து ரத்த யூரியா (உப்புச்சத்து) அளவினை கூட்டுகிறது. தகுந்த சிகிச்சை மேற்கொள்ளா விடில் மொத்த சிறுநீரகத்தை யும் செயலிழக்க செய்து விடு கிறது. (Chronic Renal Failure) அதனை சரி செய்ய இரத்த சுத்திகரிப்பு (Haemodialysis) மாற்று சிறுநீரக சிகிச்சை மேற் கொள்ள வேண்டிய தாகிறது. இதய நாளங்கள் அடைப்பு, கை, கால்களை ரத்த நாளங்கள் அடைப்பு உண்டாக காரணமாக அமைந்துவிடுகிறது. கால்கள் பாதம் உள்ளிட்ட ரத்த நாளங்கள் அடைப்பு உண்டாக காரணமாக கால்கள் செயல் இழந்து விடுகின்றன. கண் விழித்திரையில் கோளாறு களை ஏற்படுத்தி பார்வை அற்ற நிலையை உண்டாக்கு கிறது. இந்த நிலைமையை மாற்ற லேசர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சாதாரண மக்கள் டயாலிஸில், லேசர் சிகிச்சை சிறுநீரக மாற்று சிகிச்சை இவற்றை யெல்லாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது. ஆக சர்க்கரை நோயை ஆரம்ப காலகட்டங்களில் கட்டுப்படுத்தி ஓரளவு நம்மை காப்பாற்றிக் கொள்ள நமது உணவுப் பழக்கங்களைப் சற்றே மாற்றி சீரான முறையான சிகிச்சை முறைகளை மேற்கொள்வது நலம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாதம், கால் ஆகியவற்றில் சீரான கவனம் செலுத்த வேண்டும். காலிலும், பாதத்திலும் ஏற்படுகின்ற சிறுகாயங்கள், புண்கள் ஆகியவற்றை உடனடியாக கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

தீய பழக்கங்கள்

மது, புகையிலை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மேற்கூறியவற்றை கடை பிடித்து ஆரோக்கியமாக நிம்மதியாக வாழ்வோமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *