கியாஸ் சிலிண்டரினால் ஆபத்து நிச்சயம்

பல்வேறு தொழில் நிறுவனங்களிலும், வீடுகளில் சமையல் செய்யவும் கியாஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. பெண்கள் சிலிண்டர்களை கையாளுவதில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் ஆபத்து நிச்சயம்.

* 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு மெக்கானிக் மூலம் கியாஸ் அடுப்பையும், சிலிண்டர்களையும் பரிசோதித்துக் கொள்வது முக்கியம்.

* கியாஸ் சிலிண்டரை நடைபாதையிலோ அல்லது தரை மட்டத்துக்கு கீழோ வைத்து பயன்படுத்தாதீர்கள்.

* ரப்பர் குழாயில் அவ்வப்போது ஏதேனும் வெடிப்பு உள்ளதா அல்லது சரியாக பொருத்தப்பட்டுள்ளதா? என்று கவனிக்க வேண்டும்.

* இரவு தூங்க செல்லும் முன்பும், வெளியே செல்லும் முன்பும் ஒரு முறைக்கு பல முறை ரெகுலேட்டர் வால்வு மூடி இருக்கிறதா? அடுப்பு அணைக்கப்பட்டு உள்ளதா என்பதை கவனிக்கவும்.

* வால்வு வழியாக கியாஸ் கசிவு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* குழந்தைகள் தொடும் உயரத்தில் இருக்கக்கூடாது.

* சமையல் அறை நல்ல காற்றோட்டமாகவும், சுலபமாக வெளியேறுவதற்கு வசதியாக இருக்க வேண்டும்.

* சமையல் அறையுடன் படுக்கை அறை சேர்ந்து இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* அடுப்பை ஜன்னலுக்கு எதிரே வைக்காமல் தள்ளி வைக்க வேண்டும். இதனால் ஜன்னல் வழியாக அடிக்கும் காற்று நெருப்பை பாதிக்காது.

* சமைக்கும் போது நைலான் ஆடைகளை அணியாதீர்கள்.

* சமையல் முடியும் வரை சமையல் அறையிலேயே இருங்கள்.

* சமையல் அறையில் அடுப்பின் மேல் நேராக காற்று படும்படி மின்விசிறி இருக்கக்கூடாது.

* சமைக்கும் பகுதி திரைச்சீலைக்கு அருகில் இருந்தால் நீளமான திரைச்சீலைகளை பயன்படுத்தாதீர்கள்.

Originally posted 2017-12-04 02:28:24. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *