விளையாட்டுப்பொருட்களும் தீங்கு விளைவிக்கும் எம் செல்லக்குழந்தைகளுக்கு

விளையாட்டுப் பொருளின் பேக்கிங்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் எச்சரிக்கைகளை கவனமாகப் படித்து, வயதுக்கு ஏற்ற பொம்மைகளை தேர்ந்தெடுக்கலாம்.

எடை இல்லாத விளையாட்டுப் பொருட்கள், முனை மழுங்கலான பொருட்கள், மரத்தாலான பொம்மைகள், இயற்கை சார்ந்த பொருட்கள் என குழந்தைகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களாக வாங்கிக்கொடுக்கவும்.
வீட்டில் ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் இருந்தால், பெண் குழந்தைக்கு கிச்சன் செட், ஆண் குழந்தைக்கு துப்பாக்கி என்று நீங்களாகவே அவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களை தீர்மானிக்காதீர்கள். அவர்களுக்கு எது விருப்பம் என்பதைக் கேட்டு வாங்கிக் கொடுங்கள். விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தருவதை விட முக்கியமானது, பெற்றோரும் அவர்களுடன் அமர்ந்து விளையாடுவது, விளையாட கற்றுக்கொடுப்பது, கதை சொல்வது! அதை தவறாமல் செய்யுங்கள்”
கூர்மையான முனைகள் கொண்ட பொம்மை, சிறு பொம்மைகள், சின்னச்சின்ன பாகங்கள் கொண்ட விளையாட்டுப் பொருட்கள் ஆபத்தானவை. ஏனெனில் குழந்தைகள் அவற்றை விழுங்கி விடலாம்.
மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பவுன்ஸர் (ரப்பர்) பந்தை வாங்கிக்கொடுத்தால் அதை பிடிக்கப்போய் விழவோ, சுவரில் மோதிக்கொள்ளவோ நேரிடும் என்பதால் அதிகம் மேலெழும்பாத சாஃப்ட் பந்து வாங்கிக்கொடுப்பது பாதுகாப்பானது.
குழந்தைகள் பேட்டரியை நக்குவது, கடிப்பது, வாயில் போட்டுக்கொள்வது போன்ற செயல்களைச் செய்யும்போது அதில் உள்ள கரிப்பொருள் அவர்கள் வயிற்றுக்குள் சென்றால் விஷமாகிவிடும். எனவே, பேட்டரியில் இயங்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *