அரிசி மாவில் இளமையை தக்க வைத்து அழகுடன் உலா வர

நாம் வீட்டில் அரிசியை சாதமாக்கி சாப்பிட மட்டுமே பயன்படுத்துகிறோம். அதே அரிசியை மாவாக்கி நமது முகம் மற்றும் சரும பொலிவிற்கு பயன்படுத்தலாம். அதிக செலவின்றி சுலபமாய் கிடைக்கும் அரிசி மாவில் இளமையை தக்க வைத்து அழகுடன் உலா வரலாம்.

அரிசியில் உள்ள டைரோசினேஸ் தோலில் மெலாமின் உருவாகுவதை கட்டுப்படுத்துகிறது. இதுவே தோல் பகுதியில் உள்ள அதிகபட்ச எண்ணெய் மற்றும் சீபம் போன்றவற்றை நீக்குகிறது. அரிசியில் உள்ள உயர்வான விட்டமின் டி சத்து வாயிலாக புதிய செல் உருவாக்கம் நடைபெற்றது. அதனால் வயோதிக தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அரிசி மாவின் மூலம் சருமம் வழுவழுப்புடன், பிரகாசமாக பொலிவுடன் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

மங்கிய நிற முகத்தில் பளிச்சென மாற்றும் பேஸ்பேக்:

சூரிய வெளிச்சம் பட்டு நல்ல சருமம் ஒருவித பழுப்பு நிறமாய் மாறி விடும். அந்த பழுப்பு நிறத்தை போக்க செய்து முகத்தை பளபளப்புடன் இருக்க செய்ய இதோ…

அரிசி மாவு – 2 டீஸ்பூன்,
தக்காளி – 1,
மஞ்சள் தூள் – கொஞ்சம்,
பால் அல்லது தண்ணீர் – சிறிதளவு.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு போட்டு அதில் மசித்த தக்காளி மற்றும் மஞ்சள்தூள் கலந்து நன்கு கலக்கவும். நன்கு குழைத்த பின், முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி, இந்த பேஸ்ட் கொண்டு நன்கு தேய்த்து விடவும். ஒரே சீராக தேய்த்து பூசி விட்டு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விடவும். இதுபோல் வாரம் ஒருமுறை செய்ய முகத்தின் நிறம் மாறும்.

எண்ணெய் பிசுக்கு சருமத்திற்கு ஏற்ற டோனர்:

ஒரு கப் தண்ணீரில் அரிசி மாவை கலந்து ஓர் இரவு முழுக்க ஊற விடவும். காலையில் தெளிந்த அரிசி மாவு நீர் மட்டும் வடிகட்டி எடுத்து அதனுடன் 3 டிஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும். இந்த டோனரை ஒரு பஞ்சில் நனைத்து முகத்தில் மெதுவாக தடவி விடவும். இதன் மூலம் எண்ணெய் வடிதல், சரும நிறமிழப்பு, துளைகளில் அடைந்த அழுக்குகள் போன்றவை நீங்கி சருமம் பொலிவு பெறும்.

முகப்பரு, கரும்புள்ளி நீக்கும் அரிசி மாவு மசாஜ்:

அரிசி மாவு – 2 டிஸ்பூன்,
தேன் – ஒரு ஸ்பூன்,
கற்றாழை பசை 2 டிஸ்பூன்,

இவை மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும். இதன் மூலம் முகப்பரு ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் கிருமிகள் வெளியேற்றப்படும். தேன் வாயிலாக சருமத்தின் கரும்புள்ளிகள் நீங்கும்.

முகப்பொலிவிற்கு உதவும் வெள்ளரி அரிசி மாவு மாஸ்க்:

முகத்தை வெண்மையை செய்வதில் அரிசி மாவும் வெள்ளரியும் நல்ல பலனை தருகின்றன. 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன் 1 டிஸ்பூன் வெள்ளரி சாறு கலந்து முகம், கழுத்து என பூசி 15 நிமிடம் கழித்து கழுவவும். முகம் பளபளப்புடன் தோன்றும்.

Originally posted 2017-12-03 16:20:50. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *