சூப்பரான நண்டு மசாலா ரெடி

சாதம், தோசை, சாம்பார் சாதத்திற்கு சூப்பராக இருக்கும் இந்த நண்டு மசாலா. இன்று இந்த நண்டு மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

நண்டு – முக்கால் கிலோ,
தக்காளி – 2,
சின்ன வெங்காயம் – 100 கிராம்,
பச்சை மிளகாய் (சிறியது) – 2,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
சோம்பு – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
பட்டை, பிரிஞ்சி இலை – தலா ஒன்று,
பாட்டி மிளகாய் தூள் – 2 டேபிள்ஸ்பூன்,
தேங்காய் – கால் மூடி,
பாட்டி மிளகுதூள் – 2 டீஸ்பூன்,
பூண்டு – 5 பல்,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

கொத்தமல்லி, தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய், மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் பாட்டி மிளகாய் தூள், நண்டு சேர்த்து கிளறவும். நண்டில் உள்ள தண்ணீர் வற்றும் வரை நன்றாக கிளறி விடவும்.

அடுத்து அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி. நன்கு கொதிக்கவிடவும்.

நண்டு வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்துக்கு வந்தவுடன் கொத்தமல்லி, பாட்டி மிளகுதூள் தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான நண்டு மசாலா ரெடி.

சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்… சுவையில் அள்ளும். வெங்காய சாம்பாருக்கு சூப்பர் காம்பினேஷன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *