இனிப்புகளுக்கு வாயை பிளக்கும் குழந்தைகளைக் கையாள சில எளிய வழிகள்!!!

உங்கள் குழந்தை சர்க்கரைக்கு மிகவும் அடிமையாகிவிட்டதா? சரி அதுப்போன்று ஆகாமல் இருக்க பெற்றோர் ஒரு உக்தியைப் பயன்படுத்த வேண்டும். குழந்தை உண்ணும் உணவுகள் விஷயத்தில் பெற்றோர் மிகவும் விழிப்புடன் இருந்தால், இது போன்று சர்க்கரைக்கு அடிமையாகாமல் தடுக்க முடியும்.

நீங்கள் அவர்கள் உண்ணும் உணவில் கவனமுடன் இல்லையென்றால், குழந்தைகள் சர்க்கரையின் இனிய ஈர்க்கும் சுவைக்கு அடிமையாகிவிட வாய்ப்புண்டு. எனவே இதுப்போன்ற இனிப்புகளுக்கு வாயை பிளக்கும் குழந்தைகளைக் கையாள எளிய வழிகள் இதோ உங்களுக்காக.

சிறு சிறு அளவில் உண்பதற்குக் கொடுங்கள்
இனிப்புகளை அறவே ஒதுக்குவது குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு நல்லது தான் என்றாலும், அது குழந்தைகளை வேறு எங்காவது அதனை பெற்று உண்ணும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. எனவே சிறு சிறு அளவுகளில் சில சமயங்களில் மட்டும் கொடுங்கள்.

ஒவ்வொரு முறையும் தரவேண்டிய அளவு கொடுக்கும் அளவு சிறியதாக இருப்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால் அவர்கள் விரைவில் அதற்குப் பழக்கப்பட்டுவிடுவார்கள்.

உணர்வு பூர்வமாக உண்ணுவதை தவிர்த்திடுங்கள் அவர்கள் நடவடிக்கையை அல்லது எண்ணத்தைத் திசை திருப்ப இனிப்புகளைக் கொடுப்பதை முயற்சி செய்யாதீர்கள். உங்கள் குழந்தைகள் வருத்தத்துடன் இருக்கையில் அவர்களுக்கு இனிப்புகளை வழங்குவதன் மூலம் அதனை போக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், அது அவர்களின் மனதில் ஒரு தவறான வழக்கத்தை விதைக்கும்.

ஒரு நல்ல பெற்றோராக இருங்கள் உங்கள் குழந்தைகள் உங்கள் செய்கைகளைப் பின்பற்றுவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர்கள் முன்பு இனிப்புகள் உண்பதைத் தவிருங்கள். ஏனெனில் அது அவர்களுக்கு ஆவலைத் தூண்டும்.

அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள் அதிக அளவு இனிப்புகள் மற்றும் சர்க்கரையை உண்பதால் ஏற்படும் உடல் நலக் கேடுகளை அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். இது அவர்களுக்கு மெதுவாக இனிப்புகளை அதிகமாக உண்பதால் வரும் தீமைகளைப் புரிந்து கொள்ள உதவும்.

Originally posted 2017-06-30 01:07:41. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *