டூ வே கண்ணாடியை கண்டறிவது எப்படி?

பொதுவாக உயர் அளவிலான போலீஸ் விசாரணை, ஆட்களை அடையாளம் காட்டுதல் போன்றவற்றுக்கு ‘டூ வே’ (இருபக்க) கண்ணாடி பயன்படுத்தப்படும். அதாவது, முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடிதான். ஆனால், அதன் பின்னால் இருந்துகொண்டு இங்கு நடப்பதை பார்க்க முடியும். அவர்கள் இருப்பது இங்கிருந்து தெரியாது.

லாட்ஜ்கள், ஜவுளிக் கடைகளில் இருப்பது இத்தகைய கண்ணாடி இல்லை என்பதை உறுதிசெய்துகொள்வது அவசியம்.

பொது இடங்களில் நாம் பயன்படுத்தும் கழிப்பறைகள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள், உடை மாற்று அறைகள் போன்ற இடங்களில் வைக்கப்படிருக்கும் கண்ணாடிகள் மூலம் நாம் நம்மை மட்டுமே பார்க்க இயலும் என்று நினைத்தால் அது தவறு. நமக்கு தெரியாமலே எதிரில் இருந்து வேறொருவர் நம்மை பார்க்க வாய்ப்புள்ளது. அப்படி அவர் நம்மை பார்ப்பது நமக்கு தெரியாது. மாறாக நமக்கு நம் பிம்பம் மட்டுமே பிரதிபலிக்கப்படும்.

சரி இதனை எப்படி கண்டறிவது என்பதை பார்க்கலாம்.

1.உங்கள் கை விரலின் நகத்தினை எதிரே இருக்கும் கண்ணாடியின் மீது வைக்கவும். அவ்வாறு வைக்கும்போது உங்கள் கை விரலின் நகத்திற்கும், கண்ணாடியில் தெரியும் பிம்பத்தின் நகத்திற்கும் இடையே ஒரு சிறிய இடைவெளி இருந்தால் அது ஒரு வழியாக மட்டுமே பார்க்க இயலும் கண்ணாடி. எதிர்புறம் இருந்து யாராலும் பார்க்க இயலாது.

2.மாறாக உங்கள் கை விரலின் நகத்திற்கும், கண்ணாடியில் தெரியும் பிம்பத்தின் நகத்திற்கும் இடையே இடைவெளி இல்லாமல் இரண்டும்(நகங்கள்) ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டால் சந்தேகமே வேண்டாம், நிச்சயம் அது ஒரு

2 வழி ஆடி கண்ணாடி என்பது உறுதி. எதிர்புறம் இருந்து யார் வேண்டுமானாலும் பார்க்க இயலும்.

3.இதற்கு காரணம் ஒரு வழியாக மட்டுமே பார்க்கக்கூடிய ஒருவழி ஆடி கண்ணாடிகளில் சில்வர் முலாம் (வெள்ளி முலாம்) பின்புறம் பூசப்பட்டிருக்கும். இருவழி ஆடி கண்ணாடிகளில் சில்வர் முலாம் (வெள்ளி முலாம்) கண்ணாடிகளின் மேற்பரப்பில் பூசப்பட்டிருக்கும்.. எனவே பொதுஇடங்களில் கண்ணாடிகள் கொண்ட அறைகளை பயன்படுத்தும்போது இந்த விரல் சோதனை மிக மிக அவசியம் என்பதை நினைவில் கொள்க..!!!

வழக்கத்தைவிட உங்கள் அறையில் விளக்கு வெளிச்சம் அதிகமாக, கண்ணை கூசும் அளவில் இருந்தால், அங்கு இருப்பது இருபக்க கண்ணாடி யாக இருக்க வாய்ப்பு அதிகம். ஏனென்றால், மங்கலான வெளிச்சத்தில் இத்தகைய கண்ணாடி வழியாக தெளிவாக ஊடுருவிப் பார்க்க முடியாது. ரகசிய கேமரா மட்டுமின்றி, முகம் பார்க்கும் கண்ணாடியால் கூட வில்லங்கம் ஏற்படலாம்.

விளக்குகளை அணைத்துவிட்டு கண்ணாடி மீது டார்ச் அடித்துப் பார்த்தால், பின்னால் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறியலாம். கருப்பு பிலிம் ஒட்டப்பட்ட காருக்குள் பார்ப்பதுபோல, இரு கைகளையும் அணைத்து வைத்தபடி கண்ணாடியோடு முகத்தை ஒட்டிக்கொண்டு பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியும்.

இதுபோன்ற ரகசிய கேமராக்கள், அகச்சிவப்பு கேமராக்களைக்கூட கண்டுபிடிக்கக்கூடிய கருவிகளும் சந்தையில் கிடைக்கின்றன.உங்கள் சகோதரிகள், மனைவி, மகள்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் ஆகியோரிடம் இந்த செய்தியை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்..!!!! ஏனென்றால் விழிப்புணர்வு ஒன்றே ஆபத்தில் இருந்து தப்பிக்கும் எளிய வழி..

Originally posted 2017-05-08 15:16:37. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *