நாளைய வெற்றியை உறுதிபடுத்த நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 உண்மைகள்!!!

வெற்றியும், மகிழ்ச்சியும் சந்தையில் கிடைக்கும் பழங்கள் அல்ல. பூமியில் மறைந்திருக்கும் விருட்சம். விதைப்பவன் மட்டுமே அறுவடை செய்ய முடியும். சிலர் அதை திருடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அது நிலையல்ல.

வெற்றியும், தோல்வியும் நிலவை போல, அமாவாசையாய் தேய்பவனால் மட்டுமே, பௌர்ணமியாய் வளர முடியும். எதிர்பார்ப்பு, பொறாமை போன்றவை தான் உங்கள் மகிழ்ச்சியை கொல்லும் முதல் கருவிகள். இவை இரண்டை முதலில் விட்டொழியுங்கள்.

இனி, நாளைய வெற்றியை உறுதிபடுத்தக் கொள்ள, நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 உண்மைகள் பற்றி காண்போம்…

உண்மை:10 எதற்காகவும் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அனைத்தும் எப்படி நடக்க வேண்டுமோ, அவ்வாறே நடக்கும், நீங்கள் உங்கள் பாதையை விட்டு விலகாமல், மாறாமல் இருக்கும் வரை.

உண்மை:09 உங்கள் திருப்தி, உங்களது எதிர்பார்ப்பை பொறுத்து தான் இருக்கிறது. எதிர்பார்ப்பு அதிகரிக்கும் போது தான் திருப்தி குறைகிறது. எனவே, உங்கள் எதிர்பார்ப்பை பூஜ்ஜியம் அக்கிவிடுங்கள், 100% திருப்திகரமாக இருப்பீர்கள்.

உண்மை:08 எந்த ஒரு வேலையில் மற்றவரை விட நீங்கள் சிறந்து விளங்க முடியாது என்று எண்ணுகிறீர்களோ அப்போது தான் பொறாமை பிறக்கிறது. யாருடனும் உங்களை ஒப்பீடு செய்துக்கொள்ள வேண்டாம். அனைவரும் ஏதோ ஓர் துறையில் சிறந்தவர்கள் தான்.

உண்மை:07
உங்களோடு பணிபுரியும் நபர்கள் சிறிதளவு ஏதேனும் சாதித்தால் கூட பாராட்டுங்கள்.

உண்மை:06
நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை நோக்கி முனைந்து செல்லுங்கள். உங்களுக்கு வேண்டியதை அடைய பயந்தால் முடியாது.

உண்மை:05
நீங்க வேண்டுவது வெளியில் இல்லை. உங்களுக்குள் இருக்கிறது. அதற்கு நம்பிக்கை அளித்து வெளிபடுத்துங்கள், நீங்கள் உலகிற்கு நீங்களாகவே வெளிப்பட வேண்டும்.

உண்மை:04 அவரவர் விரும்புவதை நல்ல முறையில், சரியான பாதையில் செய்தால் மட்டுமே போதுமானது. உலகம் தானாக அதுவே மாறிவிடும். தனியாக யாரும் மாற்ற தேவையில்லை.

உண்மை:03
உங்கள் மீதான நம்பிக்கை விதை தான், நாளை நீங்கள் சொந்தம் கொண்டாட போகும் வெற்றி எனும் பரிசு. எனவே, உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம்.

உண்மை:02
கடினம் என்பது சொல்லில் மட்டுமே சத்தியம். நிஜத்தில், எதுவும் கடினமில்லை. சரியான உழைப்பை விதையாக்கினால், உரிய பலன் கைமேல் கிடைக்கும்.

உண்மை:01 முழுநிலவு மாதம் முழுக்க தோன்றாது, வெற்றியும் அப்படி தான். கண்டிப்பாக அது தோன்றும், அதுவரை காத்திருங்கள். அமாவாசை இல்லாத பௌர்ணமி சாத்தியமில்லை. வெற்றியும், தோல்வியும் அவ்வாறு தான்.

Originally posted 2017-05-06 16:37:59. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *