வயதாவதை சுட்டிக்காட்டும் கண்களின் அடிப்பகுதியை எப்படி பராமரிக்கலாம்?

கண்ணாடியில் போய் கொஞ்சம் முகத்தைப் பாருங்க. கண்ணின் ஓரத்தில் சுருக்கங்கள் பரவி காணப்படுகிறதா? நிரந்தர கருவளையங்கள் மறைய மாட்டேன் என்று ஆடம் பிடிக்கின்றனவா?

வீங்கித் தொங்கும் இமைகள் உங்களை நாள்முழுவதும் சோர்வாகக் காட்டுகிறதா. அப்படியானால் இவற்றை சரிசெய்ய உங்களுக்கு பின்வரும் குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒருபோதும் உங்கள் கண்களை சுற்றிய பகுதிகளில் பேஸ்வாஷ், ஸ்க்ரப் மற்றும் பிற கடினமான பொருட்களை நேரடியாக பயன்படுத்தாதீர்கள். உங்கள் உள்ளங்கையால் அங்கு தேய்ப்பதையும் தவிருங்கள்.

இதைத் தவிர பின்வரும் சில அற்புதமான குறிப்புகள் உங்கள் கண்களுக்கு கீழுள்ள சருமத்தை இயற்கையாகப் பாதுகாக்க

கருவளையத்திற்கு குட் பை ! ஒரு வைட்டமின் ஈ கேப்சியுலை எடுத்து அதில் உள்ள ஜெல்லை ஒரு கிண்ணத்தில் பிதுக்கி எடுத்துக்கொள்ளவும்.

அதில் சில துளிகள் ஆலிவ் எண்ணெய்யைத் சேர்த்து உங்கள் கண்ணிற்கு கீழுள்ள இடத்தில் மென்மையாக தேய்த்து விடவும். அதை இரவு முழுதும் அப்படியே விட்டுவிடவும்.

கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இந்த மாஸ்க் கண்ணிற்கு கீழுள்ள பகுதியில் ஈரப்பதம் கொடுத்து ஊட்டமளித்து கருவளையங்களைக் குறைக்கும்.

வீங்கித் தொங்கும் இமைகளுக்கு குட் பை பயன்படுத்திய கிரீன் டீ பைகளை (டீ பேக்) எடுத்து அதை பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து பின்னர் அதை கண்கள் மீது வைக்கவும். இந்த குளிர்ச்சியான பைகளின் குளிர்ச்சி நீங்கும் வரை அதனை வைத்திருக்கவும். கிரீன் டீயின் நிறைய ஆன்டி ஆக்சிடென்டுகள் உடல் இயக்கத்தை தூண்டி, கண்ணை சுற்றியுள்ள தசைகளுக்கு ஆறுதலாளித்து உங்கள் கண் இமை தொய்வைக் குறைக்கும்.

கண்களின் ஓரமுள்ள சுருக்கங்கள் கண்களின் ஓரத்தில் ஏற்படும் சுருக்கங்களை சிறிதளவு இயற்கை தேனை பஞ்சில் தொட்டு எடுத்து (ஒரு ஸ்பூன்) உங்கள் கண்களுக்கு கீழே பூசுங்கள். ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து சுத்தமான ஒரு ஈராக் துணியைக் கொண்டு துடைத்தெடுங்கள். இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்துவந்தால் தேனில் உள்ள அமினோ அமிலங்கள் ஈரப்பதத்தை தக்கவைத்து சுருக்கங்களை மறையவைக்கும்.

கண் வீக்கத்திற்கு டாட்டா : வெள்ளரி சாற்றையும் கிரீன் டீயையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும். அதை ஐஸ் ட்ரேவில் இட்டு பிரிட்ஜில் வைத்து உறைய வைக்கவும். அது உறைந்து கியூபாக மாறியவுடன் அதை கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் தேய்க்கவும். இதை தினமும் செய்து வர கிறீன் டீயில் உள்ள டானின் உட்பொருள் வீக்கங்களை சுருங்கச் செய்து வெள்ளரிச் சாறு தோய்ந்த கண் சரும நரம்புகளுக்கு புத்துணர்ச்சியூட்டி வீக்கத்தை நீக்கும்.

கண்ணை பளிச்சிடச் செய்யும் மாஸ்க் ஒரு சிறிய பஞ்சு உருண்டையை எடுத்து குளிர்விக்கப்பட்ட ரோஸ் வாட்டரில் நனைத்து உங்கள் கண்ணை சுற்றி தடவவும். அதை இயற்கையாகவே நனையுமாறு வைக்கவும். பின்னர் அந்த இடத்தில் ஒரு நல்ல மசாஜ் க்ரீம் கொண்டு நன்கு மசாஜ் செய்யவும். ரோஸ் வாட்டர் சரும அடுக்குகளின் ஆழத்தில் தேங்கியிருக்கும் அழுக்கு மற்றும் மாசுகளை நன்கு தூய்மை படுத்தி சரும துவாரங்களைத் திறந்து க்ரீம் நன்கு வேலை செய்ய வழி வகுக்கிறது.

சருமத்திற்கு வலுவூட்டும் மாஸ்க் முட்டையின் வெள்ளைக் கருவை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதை கூழாக அடித்துக்கொள்ளவும். இதில் மூன்று துளி பாதாம் எண்ணெய் சேர்த்தது நன்கு கலக்கிக் கொள்ளவும். பின்னர் இதை கண்ணிற்கு கீழ் தடவி நன்கு உணர்ந்தபின் தண்ணீரால் கழுவவும்.

Originally posted 2017-04-19 00:58:49. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *