பல நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைகக்கும் கிஸ்மிஸ்:

கிஸ்மிஸ்’ பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்ச்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

உலர் திராட்ச்சையின் பயன்கள்:

* ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்ச்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்த்த்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

* மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர் திராட்ச்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும.

* உலர் திராட்ச்சை பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற் வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல்  பிரச்சினை சரியாகும்.

* இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

* குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் 2 பழங்களை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.

* தொண்டைக்கட்டு பிரச்சினை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்ச்சை பழங்களை சுத்தம் செய்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் விரைவில் தகுந்த நிவாரணம் பெறலாம்.

* தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும்,மாலையிலும் 25 உலர் திராட்ச்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால், மூல நோய் உள்ளவர்கள் குணம் பெறலாம்.

* உலர் திராட்ச்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

* மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு ஆழாக்கு தண்ணீரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இரு வேளை சாப்பிட்டு வரலாம்.

பார்த்தீர்களா! பெரும்பாலான நோய்களுக்கு கிஸ்மிஸ் பழமே தீர்வாக அமைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *