இதயம்…சில குறிப்புகள்!

லப்.. டப்..

*நமது இதயம் தாயின் கர்ப்பத்தில் சுமார் 8 வாரங்களிலேயே வளர்ந்து இயங்க ஆரம்பித்துவிடுகிறது. அது வினாடிக்கு 70 முதல் 100 முறை துடிக்கிறது. இது நின்றுவிட்டால் நாம் இறந்துவிடுகிறோம்.

*ஆரோக்கியமான பெற்றோருக்கு ஆரோக்கியமான இதயம் உடைய குழந்தைகள் பிறக்கின்றன. பெண்களைப் பொறுத்தவரை வயதுக்கேற்ற ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடாதவர்களுக்கும், நெருங்கிய உறவுமுறைகளில் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கும் இதயக்கோளாறுடன் குழந்தைகள் பிறக்கின்றன.

*95 சதவிகித இதயக்கோளாறுகளை சிகிச்சை மூலம் குணப்படுத்திவிட முடியும்.

*இதயக் கோளாறுகளை 3 வகையாகப் பிரிக்கலாம். பிறவியிலேயே வரும் இதயக்கோளாறு(Congenital heart disease) அதாவது, சரியான வளர்ச்சியில்லாத இதயம், இரண்டாவது கிருமிகள் தாக்கப்பட்ட இதயம்(Rheumatic Heart Disease). இது வளர்ச்சியடைந்த குழந்தைகளுக்கும் நடுத்தர வயதுள்ளவர்களுக்கும் வரக்கூடியது. மூன்றாவது, நெஞ்சுவலி, மாரடைப்பு நோய்(Heart Disease).

*பெண்களுக்கு இயற்கையாக சுரக்கும் Estrogen என்ற ஹார்மோன் சுரப்பினால் பெண்களிடம் மாரடைப்பு குறைந்து காணப்படுகிறது. இது பெண்களுக்கு இயற்கை கொடுத்த வரப்பிரசாதம். ஆனால், மாதவிடாய் நின்ற பிறகு ஆண்களுக்கு இணையாக மாரடைப்பு அபாயம் பெண்களிடமும் அதிகரிக்கிறது.

*கருவிலேயே குறைபாட்டுடன் இருக்கும் குழந்தையின் இதயத்தை அறுவைச் சிகிச்சை செய்து குணமாக்க முடியுமா என்பது பற்றி ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கிறது.

*உடற்பயிற்சிகள், யோகா மற்றும் தியானம் எப்போதும் இதயத்துக்கும் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *