காலை நேர தாம்பத்தியம் புத்துணர்ச்சி தரும்

காலையில் உறவு கொள்வதால் உங்கள் காதல் வாழ்க்கை பயனடைவதோடு மட்டுமல்லாது உடல் ஆரோக்கியமும் மேம்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலையில் ஒரு கப் டீ மற்றும் காலை உணவுடன் பொழுதை தொடங்குபவர்களை விட, உடலுறவுடன் தங்கள் பொழுதை தொடங்குபவர்கள் தான் மிகுந்த ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் இருக்கிறார்கள்.
அதிகாலையில் உடலுறவு கொள்வதால், நல்ல மனநிலையை ஏற்படுத்தும் ஆக்சிடாக்ஸின் என்னும் ரசாயனம் வெளிப்படும். இதனால் நாள் முழுவதும் அந்த ஜோடி அன்யோன்ய உணர்வுடன் இருப்பார்கள். காலையில் உடலுறவு கொள்வதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பது போக, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும் திடமாக்க உதவும். காலையில் உடலுறவு கொள்வதால் சளி, காய்ச்சல் மற்றும் ஃப்ளூ போன்றவைகள் உங்களை அவ்வளவு எளிதில் அண்டாது.
ஒரு வாரத்தில் காலையில் குறைந்தது 3 முறையாவது உடலுறவு வைத்துக் கொண்டால் நெஞ்சு வலி மற்றும் வாதம் ஏற்படும் இடர்பாடு குறைவாக இருக்கும். மேலும் தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகும் சூழ்நிலை உள்ளது. இரவில் வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வரும் அவர்களால் தம்பத்தியத்தில் ஈடுபட முடியதில்லை. இதனால் மனஅழுத்தத்திற்கு ஆளாக நேரிடுகிறது. இவர்கள் அதிகாலையில் தம்பத்தியத்தை வைத்துகொண்டால் ஆரோக்கியம் மேம்படும். மேலும் மனஅழுத்தம் வராது.

Originally posted 2017-02-08 04:09:47. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *