மேக்கப் நீண்ட நேரம் கலையாமல் இருக்க சில டிப்ஸ்…!

சில மேக்கப் குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் முகத்தோற்றத்தை அழகாக வெளிபடுத்துவது என்பது சிறப்பான ஒன்று. மங்கிய தோற்றத்திலிருந்து உங்களைக் காத்து கொள்ளவும், உங்கள் மேக்கப் நீடித்து நிலைக்கவும், உங்களுக்கு சில குறிப்புகளை நாங்கள் வழங்குகிறோம். அதை படித்து பலன் பெறுங்கள்.

மழைகாலங்களில் உங்கள் கண்களுக்கு நீர் புகாத ஐ லைனர்களையும், மஸ்காராவையும் பயன்படுத்துங்கள். கண்ணிற்கான மேக்கப்பை பொறுத்த வரை மங்கலாகும் தன்மையற்ற ஐ ஷேடோ க்ரீம்களை பயன்படுத்துங்கள். மேபெலைன் பிராண்டில் எண்ணற்ற நீர்புகாத ஐ லைனர்கள் மற்றும் ஐ ஷேடோ கிரீம்கள் பல வண்ணத்தில் கிடைக்கின்றன.

நமது உதடு அடிக்கடி உலர்ந்து விடுவதும், லிப்ஸ்டிக்கின் நிறம் மங்கி விடுவதும் வழக்கமான ஒன்று. இதனை தடுக்க முதலில் லிப் லைனரை பயன்படுத்தி விட்டு, பின்னர் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். நாம் தேர்ந்தெடுத்துள்ள லிப்ஸ்டிக் உழற்றும் தன்மையற்ற ஈரப்பதம் நிறைந்துள்ளதாக இருப்பது சிறந்தது.

உங்கள் சருமத்தை உலர்வானதாகவும், எண்ணெய் பசையற்றதாகவும் விளங்க செய்திட உங்கள் கைப்பையில் எப்போதும் சில டிஸ்யூ தாள்களையும், பவுடர் பப்பையும் வைத்திருங்கள். இவற்றைக் கொண்டு உங்கள் முகத்தில் ஒற்றி எடுங்கள். தேய்க்காதீர்கள்.

நீங்கள் உங்கள் மேக்-கப்பை துவங்கும் முன் உங்கள் சருமம் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்தி கொள்ளுங்கள். உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை மெல்லிய துகள்களான ஸ்க்ரப்பை கொண்டோ அல்லது மெல்லிய துணியை கொண்டோ அகற்ற வேண்டும்.

உங்கள் சருமத்திற்கு ஈர்ப்பதமூட்டும் போது, உங்கள் மேக்கப் உலர்ந்து போகாமலும், சீராகவும் இருக்கும். மேலும் நீங்கள் உங்கள் மேக்கப் போடும் முன், ஈரப்பதமூட்டும் லோஷனை கொண்டு துவங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

நடுத்தர தன்மை கொண்ட ஃபவுண்டேஷனை உங்கள் முகத்திற்கு பயன்படுத்துங்கள். உங்கள் முகத்திலுள்ள மாசு மருக்களை நீங்கள் மறைக்க விரும்பினால், ஃபவுண்டேஷன் பயன்படுத்தும் முன் கன்சீலர் கொண்டு மறையுங்கள். கன்சீலரை மாசு மருக்களை மறைக்க மட்டும் பயன்படுத்துங்கள். அது முகம் முழுவதும் பரவி விட கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

எண்ணெய் மண்டலத்திலிருந்து நாள் முழுவதும் பாதுகாக்க பவுடரே சிறந்த தேர்வாகும். தளர்வான ட்ரான்சுலான்ட் பவுடரை தேர்வு செய்வதை விட பவுண்டேஷனை தங்க வைக்க அழுத்தமான பவுடரை தேர்வு செய்யலாம். கண்களுக்கு அடியில் ஃபவுண்டேஷனை தங்க வைக்க பவுடர் பப் -ஐ பயன்படுத்துங்கள் மற்ற இடங்களில் நீண்ட பிரஷ்ஷைப் பயன்படுத்துங்கள்.

Originally posted 2017-01-05 08:16:54. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *