பனிக்குடம் உடைதல் பற்றி பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியது

கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid)இருக்கிறது. இது குழந்தையை பல விதங்களில் பாதுகாக்கிறது.

அமுக்க விசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது. இந்தத் திரவத்தைச் சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு (amniotic membrane) உள்ளது.

இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும். ஆனாலும் சில வேளைகளில் அதற்கு முன்னமே அது

உடையலாம். அது Pre labour rupture of membrane எனப்படும். அதனால் குழந்தையைச் சுற்றியுள்ள திரவ நீர் வெளியேறுவதோடு

கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று குழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் பாதிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.

இதன் அறிகுறிகள்:

திடீரென பிறப்பு உறுப்பு வழியே நிறையத் திரவம் (நீர் வெளியேறுதல்).

இவ்வாறு ஒரு கர்ப்பிணிக்கு திடீரென நீர் வெளியேறினால் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும்.

மருத்துவமுறை:

34 வார கர்ப்ப காலத்திற்கு முன் இது நடை பெற்றால் மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு 34 வாரம் வரை கண்காணிக்கப்பட்டு அதன் பிறகு குழந்தை பிறப்பு தூண்டப்படும்.

ஆனாலும் அதற்கு முன் கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றினாலோ அல்லது தொப்புள் கோடி கீழிறங்குவது உறுதி செய்யப்பட்டாலோ உடனடியாக பிறப்பு தூண்டப்படும்.

இது யாருக்கு ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட முடியாது.

ஆனாலும் ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

Originally posted 2016-12-23 02:47:10. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *