தாய்பால் தருவதில் தான் குழந்தைகளின் எதிர்கால உடல்நிலை பாதுகாப்பு இருக்கிறது!!

அழகு குறைந்துவிடும் என்ற அச்சத்தில் இன்றைய மாடர்ன் மங்கைகள் தாய்பால் தருவதை சில வாரங்களிலேயே நிறுத்தி விடுகின்றனர். இன்றைய குழந்தைகளின் உடல்நலம் குன்றி போவதற்கு இதுவே முக்கிய காரணம். இதை எடுத்துரைக்கவே நமது நாட்டில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் முழுக்க வருடா வருடம் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இன்றைய இளம் தாய்மார்கள் மருத்துவமனைக்கு பணம் தரக் கூட தயாராக இருக்கிறார்கள். ஆனால், ஏனோ தாங்கள் பெற்ற குழந்தைக்கு தாய்பால் தருவது எனில் மனம் சுருங்கி போய் விடுகின்றனர். உங்களது குழந்தையின் எதிர்கால உடல்நலத்திற்கு நீங்கள் இன்று தரும் தாய்பால் மிக முக்கியம் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இதய நோய் பாதிப்புகள

் குறைவு தாய்பால் நிறைய பருகிய குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவாம். தாய்பாலில் இருக்கும் நல்ல கொழுப்பு இதய பாதிப்புகள் ஏற்படாமல் காக்குமாம். இதயத்திற்கு வலு சேர்க்குமாம்.

பற்களின் நலன்

குழந்தைகளின் பற்களின் நலத்தை அதிகரிக்கவும் தாய்பால் உதவுகிறது. போதுமான அளவு தாய்பால் குடித்த குழந்தைகளுக்கு பல் சார்ந்த பிரச்சனைகள் பெரிதாய் ஏற்படாதாம்.

டைப் 1 நீரிழிவு

போதிய அளவு தாய்பால் பருகாத குழந்தைகளுக்கு, சிறு வயதிலேயே டைப் 1 நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறதாம். தாய்பாலின் மூலமாக தான் குழந்தைகளுக்கு தேவையான இன்சுலின் கிடைக்கிறதாம்.

ஒவ்வாமைகள் ஏற்படாது

குறைந்தது ஒன்றரை வயது வரை தாய்பால் பருகும் குழந்தைகளுக்கு நோய் தொற்று, ஒவ்வாமைகள் போன்ற பிரச்சனைகள் அவ்வளவாக அண்டாதாம். தாய்பாலில் இருக்கும் அன்டி-பாடீஸ் குழந்தைகளை ஒவ்வாமை தாக்காமல் தடுக்கிறதாம்.

ஐ.க்யூ அதிகம்

போதுமான அளவு தாய்பால் பருகும் குழந்தைகளுக்கு ஐ.க்யூ அளவு அதிகமாக காணப்படுகிறது என்றும், இவர்களது நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் மற்றவர்களோடு ஒப்பிடும் போது அதிகமாக இருக்கிறதாம்.

எலும்பின் வலுமை

தாய்பால் அதிகம் குடிக்கும் குழந்தைகளுக்கு எலும்பின் வலுமை அதிகரிக்கிறது.

உடல்பருமன்

குழந்தை பருவத்தில் குறைவாக தாய்பால் பருகிய குழந்தைகளுக்கு தான் அதிகம் உடல்பருமன் அதிகரிக்கிறதாம். தாய்பால், குழந்தைகளின் உணவுப் பழக்கத்தில் பெரும் பங்குவகிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *