ஆண்களின் ஆசையை அதிகரிப்பதில் பெண்களின் ஆடைக்கு முக்கிய பங்குண்டு

ஆண்களின் காதல் உணர்வுகளை அதிகரிப்பதில் உடைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று தெரியவந்துள்ளது.

ஆண்களின் ஆசையை அதிகரிப்பதில் பெண்களின் ஆடைக்கு முக்கிய பங்குண்டு
சிவப்பு நிற ஆடை அணிந்துள்ள பெண்களைக் கண்டதும் ஆண்களுக்கு காதல் உணர்வு கிளர்ச்சி அதிகரிக்கிறதாம். எனவே பெண்களே தனியாக எங்காவது சென்றாலோ, காதலரை சந்திக்க சென்றாலோ சிவப்பு நிற ஆடைகளை அணிவதை தவிர்க்கலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

அதேசமயம் கணவருக்கு மூடு வரவழைக்க நினைக்கும் பெண்கள் சிவப்பு நிற ஆடைகளை அணிவதற்கு தடை ஏதும் இல்லை என்கின்றனர் அவர்கள். முடிந்தால் சிவப்பு நிற உடைகளை மட்டுமே அணியலாம்.

இன்றைக்கு இளைஞர்களை அதிகம் பாதிக்கும் விசயம் ஆண்மை குறைபாடு, தாம்பத்திய உறவு பிரச்சினைதான். இணையதளங்களில் அதிகம் தேடப்படும் செய்தியும் அதுவாகத்தான் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஆண்களின் காதல் உணர்வுகளை அதிகரிப்பதில் உடைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று தெரியவந்துள்ளது.

காதலர் தினத்தில் காதலிக்கும் நபருக்கு பரிசாக சிவப்பு ரோஜா கொடுப்பது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அதேபோல தனது காதலி சிவப்பு நிற உடையணிந்து வருவதை பார்த்தால் அந்த ஆணுக்கு காதல் உணர்வு கிளர்ந்தெழுகிறதாம். இது தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் ஒன்றில் இது கண்டறியப்பட்டுள்ளது.

அதேசமயம் கவர்ச்சியாக உடை அணியும் பெண்களைக் கண்டால் ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதாம். இதனால் அவர்களின் ஆண்மை கூட பறிபோகும் ஆபத்து இருப்பதாக ஆய்வு தெரிகிறது.

நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார் ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர்.

இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களில் ஆண்களை தள்ளுகிறது என்றும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *