சருமத்தை மென்மையாக்கும் சர்க்கரை ஃபேஸ் பேக்!

என் சருமம் ஏன் கடினமாகி, சொரசொரப்புடன் இருக்குது" அப்டின்னு என்றைக்காவது ஃபீல் பண்ணியிருக்கீங்களா? அப்போ அதுக்கான காரணமும், வழியும் இங்கே இருக்கு. மேலும் படியுங்க.

சருமத்தில் நாள்தோறும் செல்கள் உருவாவது, இறப்பதும் நடக்கிற விஷயம் தானே. இறந்த செல்களை சருமம் தனது துவாரத்தின் மூலம் வெளியேற்றிவிடும்.

அந்த துவாரம் முழுவதும் தூசி, அழுக்கு படிந்திருந்தால், இறந்த செல்கள் வெளியேறாமல் அங்கேயே தங்கிவிடும். அதனால் தான் சருமம் கடினமாகி, சொரசொரப்புடன், சீக்கிரம் வயதான தோற்றத்தை பெற்று விடுகிறது.

இதற்காக முகத்தை தினமும் கழுவி பராமரித்தால், அழுக்குகள் வெளியேறி சுத்தமாகும். விடாப்படியான இறந்த செல்களை ஸ்க்ரப் மூலம் அகற்றலாம்.

அவை சருமதில் உள்ளே சென்று அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்கும். ஆனால் ஸ்க்ரப் நாம் கடையில் ஏன் வாங்க வேண்டும். வீட்டிலேயே தயாரிக்கலாம்.

சாதாரணமாக மஞ்சளும், உப்பும் அழுக்குகளை அகற்றி, முகத்தை பளிச்சிட வைக்கும். சர்க்கரையும் அவைகளுக்கு போட்டியாக சருமத்தை காக்கும்.

ஆனால் சர்க்கரையை ஸ்க்ரப்பாக உபயோகப்படுத்தி இருப்பீர்கள். அது கருமையையும் அகற்றும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதோ உங்கள் சருமத்தை அழகாக்கும் சர்க்கரையை கொண்டு செய்யும் பேக்.

கருமையை போக்கும் சர்க்கரை ஃபேஸ் பேக்: தேவையானவை : வெள்ளை சர்க்கரை-1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் -2 சொட்டு எலுமிச்சை சாறு–2 சொட்டு

எலுமிச்சை சாறு முகத்திலுள்ள கருமையை போக்கும். சர்க்கரை இரந்த செல்களை அகற்றும். ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து முகத்தை பொலிவாக்கும்.

ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரையையும், எலுமிச்சை சாறினையும் சேர்த்து நன்றாக கலக்கவும். பின் அதனை முகத்தில் போட்டு மெதுவாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.உங்கள் முகம் பளிச்சிடும்.

ஃபேஸ் பேக் 2: சர்க்கரை-1 டேபிள் ஸ்பூன் தேன்-1 டேபிள் ஸ்பூன்

இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் காய விடவும் (எறும்புகள் வராமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு) அதன் பின் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள்.

வாரம் இருமுறை செய்தால், மாசு, மருவெல்லாம் போயே போச்சு.மிருதுவான சருமத்திற்கு உங்கள் வீட்டு சர்க்கரை கியாரெண்டி தரும். ஆனால் சருமத்தை எப்போதும் பராமரிப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *