பிரசவத்திற்கு பின் வந்துவிட்டதா ஸ்ட்ரெச் மார்க்? கவலை வேண்டாம்..இதயெல்லாம் ட்ரை பண்ணுங்க

பிரசவத்திற்கு பின் ஒரு பெண்ணிற்கு ஏற்படும் பரவசத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை.புதிதாய் ஜனித்த குழந்தையை பூப் போல பார்த்துக் கொள்ளவே 24 மணி நேரம் பத்தாது என தோன்றும்.

பிரசவித்த பின் ஹார்மோன் மாற்றங்களும், உடல் பருமனாவதும் இயற்கையானதே. சுமார் 3 கிலோ உள்ள குழந்தை வயிற்றிலிருந்து வெளி வந்ததும், வயிறு சுருங்கும்போது தழும்புகள் ஏற்படுவதும் இயற்கைதான். பெரியதான விரிவடைந்த சருமம், சுருங்கும்போது சருமத்திலுள்ள கொலாஜன் உடைவதால் இந்த தழும்பு ஏற்படுகிறது.

இந்த சருமத்தைப் போக்க நிறைய பேர் க்ரீம்களை உபயோகிப்பார்கள். ஆனால் மருத்துவரின் ஆலோசனையின்றி நீங்களாகவே கடைகளில் வாங்கி உபயோகிக்கக் கூடாது. ஏனெனில் இந்த தழும்பினைப் போக்க சில க்ரீம்களில் ஸ்டீராய்டு கலந்திருப்பார்கள்.

இதற்கு க்ரீம்தான் போட வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே ஸ்ட்ரெச் மார்க் போக எளிய அருமையான தீர்வுகள் இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.

குங்குமாதி தைலம்: இது நாட்டு மருந்தகங்களில் கிடைக்கும். இதனை தினமும் இரவில் வயிற்றில் பூசி நன்றாக, இதமாக மசாஜ் செய்யுங்கள். காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் தழும்பு இருந்த இடம் தேடினாலும் கிடைக்காது.

நால்பாமராதி தைலம்: நால்பாமராதி தைலமும் ஆயிர்வேத மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதனை தினமும் பவயிற்றில் பூசி இதமாக மசாஜ் செய்யுங்கள்.பிரசவத் தழும்பு நாளடைவில் மறையும்.

கரஞ்சா இலை: கரஞ்சா இலை மருத்துவ குணம் பெற்ற மூலிகையாகும். இது ஆயுர்வேதத்தில் நிறைய சரும மற்றும் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இதனை அரைத்து வயிற்றில் போட்டு வர, நாளடைவில் நல்ல பலன் கிடைக்கும். பக்கவிளைவுகள் இல்லாதது.

மாஞ்சிஸ்தா : இது இன்னொரு வகை மூலிகையாகும். இதுவும் நாடு மருந்தகங்களில் கிடைக்கும். இது பொடியாகவும் கிடைக்கும் கேப்ஸ்யூலாகவும் கிடைக்கும். இதை வாங்கி பேஸ்ட் போல் செய்து வயிற்றுப் பகுதியில் போட்டால் பலன் கிடைக்கும்.

சந்தனம் : சந்தனம் சரும பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது. சந்தனம் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனை வயிற்றில் தடவும் போது, அங்கு கொலாஜன் அதிகமாகி தழும்பு மறையும்.

சந்தனக் கட்டையால் அரைத்துப் போடுவது நல்லது. ஏனெனில் கடைகளில் வாங்கும் சந்தன வில்லைகளில் உண்மையான சந்தனம் இருக்காது. கலப்படம் அதிகமாய் காணப்படும்.

மஞ்சள் : மஞ்சள் சரும நோய்களுக்கு அருமையான தீர்வு அளிக்கும். அது ஆன்டி செப்டிக், மாசு மருக்களை அகலச் செய்யும். மஞ்சளை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து இரவு படுக்கும் முன் தினமும் பூசி வந்தால் சில மாதங்களிலேயே தழும்பு மறைவது உறுதி.

நல்லெண்ணெய் : நல்லெண்ணெய் ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் சிறந்த பலன்களையே கொடுக்கும்.தினமும் காலையில் குளிக்கும் முன் நல்லெண்ணெயை சூடுபடுத்தி, வயிற்றில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் குளித்தால் சீக்கிரம் தழும்பு மறையும்.

இந்த அனைத்து குறிப்புகளும், பிரசவம் எற்பட்ட சில மாதங்களுக்குள் செய்தால் நிரந்தரமாக தழும்புகள் மறைந்து விடும்.

Originally posted 2016-07-16 14:01:04. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *