இதயம் மற்றும் இரத்த நாள நோய்

இரத்த நாள நோயால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலனோர் 50 லிருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களே.

இதயம் மற்றும் இரத்த நாள நோய்
இரத்த நாள இயக்கமானது உடலின் திசுக்களுக்கும் உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனையும் சத்துக்களையும் வழங்குவதற்காக இரத்தம் பாயும் தமனிகளும், நரம்புகளும் கொண்ட ஒரு விரிவான வலைப்பின்னல் அமைப்பாகும். இரத்தம் இந்தப் பயணத்தைத் திறம்படவும் பயனுள்ள வகையிலும் மேற்கொள்வதற்கு இரத்த ஓட்ட இயக்கம் தெளிவான பாதையையும் நாளங்களின் நெகிழ்வு தன்மையையும் பெரிதும் சார்ந்துள்ளது.

ஆரோக்கியமான இரத்த நாளங்கள் வலிமையாக, நெகிழ்வு தன்மை கொண்டதாக, வழவழப்பானதாக இருப்பதால் இரத்தம் அவற்றின் வழியாக உடனடியாகத் தடங்கலின்றிப் பாய்ந்து அதன் கொள்ளளவு மற்றும் அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும் எளிதாக இடமளிக்கப்படுகிறது.

ஒருவர் முதுமையடையும்போது, தமனிகள் இயற்கையாகவே தடிமனாக, விறைப்பாக, தொய்வாக ஆகின்றன. அவற்றின் சுவர்களில் கால்சியம் படிவம் உண்டாகிறது. பிற காரணிகளான, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு நீரிழிவு, புகை பிடித்தல், உடல் பருமன், மன அழுத்தம் போன்றவையும் மென்மையான இரத்த நாளங்களைச் சேதப்படுத்தலாம். இவ்வாறு தமனிகளின் தடிமன் படிப்படியாக அதிகரித்தலே ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ் எனப்படும்.

தமனி தடிப்பு (ஆர்டிரியோஸ்கிளிரோஸிஸ்) முற்றும்போது அடைப்புகளுடன் தமனிகளின் கடினத் தன்மையும் அதிகரித்து இரத்த ஓட்டத்தை மட்டுப்படுத்தும், நீண்ட நேரத்துக்கு திசுக்களையும், உடலுறுப்புகளையும் சென்றடையாமல் இரத்தம் தடுக்கப்படும்போது, அவை ஆரோக்கியமான இயக்கத்துக்குத் தேவையான சத்துக்களையும் ஆக்ஸிஜனையும் இழக்கின்றன.

இரத்த நாள நோயால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலனோர் 50 லிருந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களே. நோயறியும் சோதனைகள் மூலம் மட்டுமே புலனாகும் மறைவான இரத்த நாள நோயால் ஆண்கள், பெண்களைவிட குறைந்தபட்சம் முன்று மடங்கு அதிகமாக பாதிப்படைய தலைப்படுகிறார்கள்.

தமனித்தடிப்பின் ஆரம்ப நிலைகளில், பொதுவாக எந்த அறிகுறியும் தென்படுவதில்லை. அறிகுறிகள் இருந்தாலும் அவை வெறுமே சிறு தொந்தரவாகத்தான் பார்க்கப்படும். இந்த அறிகுறிகள் சிறிதளவே எரிச்சலூட்டும் விதமாக இருந்தாலும், கால் வலி அல்லது சுளுக்கு, கணுக்காலைச் சுற்றிலும் வீக்கம், ஜலதோஷம், கைகளிலும், பாதங்களிலும் நோவெடுக்கும் உணர்ச்சி – இவையே திவீர உட்பரவிய இதய நோயின் எச்சரிக்கும் குறியீடுகளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *