ஏழே நாட்களில் உங்கள் தொப்பை குறைய வேண்டுமா?

பொதுவாக வயிற்றில் கெட்ட கொழுப்புக்கள் மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியவையாக இருக்கும். அதிலும் உங்கள் வயிறு பானை போன்று வீங்கி காணப்பட்டால், இதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்றவை வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் உள்ளது. எனவே தொப்பை வர ஆரம்பித்தால் அதனை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமானால், காலையில் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸைக் குடிக்க வேண்டும். இது கசப்பாக இருந்தாலும், தொப்பையால் உயிரை விடுவதற்கு பதிலாக இது எவ்வளவோ மேல். வேண்டுமானால், பாகற்காய் ஜூஸ் உடன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை மிளகுத் தூள் மற்றும் ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து குடிக்கலாம். இதனால் அந்த ஜூஸில் உள்ள சக்தி வாய்ந்த உட்பொருட்கள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களைக் கரைத்து, செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடை வேகமாக குறைய உதவும்.

மாலையில் 3-4 மணியளவில் ஒரு பௌலி பப்பாளியை சாப்பிட வேண்டும். அதிலும் அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை பிழிந்து, மிளகுத் தூள் மற்றும் உப்பு சிறிது தூவி உட்கொண்டு வர, பசி அடங்குவதோடு, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து போன்றவை கொலஸ்ட்ராலைக் குறைத்து, மன அழுத்த ஹார்மோன்களை சீராக்கி, தொப்பை குறைய உதவும்.

2 டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, வெதுவெதுப்பாக சூடேற்றி, தொப்பையை தினமும் 3 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் வயிற்றில் உள்ள கொழுப்புச் செல்கள் கரைக்கப்பட்டு, தொப்பை வேகமாக குறையும்.

1 கப் முளைக்கட்டிய கொள்ளு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய வெங்காயம், 1/2 டீஸ்பூன் புதினா, சாட் மசாலா 1/2 டீஸ்பூன் மற்றும் மிளகுத் தூள் 1/2 டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பசிக்கும் நேரத்தில் உட்கொண்டு வர, பசியும் அடங்கும், கொழுப்புக்கள் கரைந்து தொப்பையும் குறையும்.

தினமும் காலையிலும், மாலையிலும் வெறும் வயிற்றில் 5 நிமிடம் கபல்பதி பிராணயாமம் செய்து வருவதன் மூலமும் தொப்பையைக் குறைக்கலாம். அதற்கு படத்தில் காட்டியவாறு மூச்சை வெளிவிடும் போது வயிற்றை உள்ளும், மூச்சை வெளிவிடும் போது வயிற்றை வெளியேயும் தள்ள வேண்டும். Show Thumbnail

1 டம்ளர் நீரை கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்ததும், அதில் 1 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படும். மேலும் செரிமானம் மேம்படும். உடலின் வெப்பநிலை அதிகரிக்கப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரையும்.

தினமும் இரண்டு முறை குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படும். மேலும் செரிமானம் மேம்படும். உடலின் வெப்பநிலை அதிகரிக்கப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரையும்.

தினமும் 1-2 பற்கள் பூண்டை பச்சையாக உட்கொண்டு, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். இப்ப காலையில் எழுந்ததும் செய்து வர தொப்பை மட்டுமின்றி, நீரிழிவு தடுக்கப்படும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், தேவையற்ற கொழுப்புக்கள் கரையும்.

ஆப்பிளை நறுக்கி துண்டுகளாக்கி, அத்துடன் பட்டைத் தூளை தூவி தினமும் பசிக்கும் போது உட்கொண்டு வர, பசி அடங்குவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து அதிகப்படியான கலோரிகளும் எரிக்கப்படும். Show Thumbnail

2 லிட்டர் சுடுநீரில் 1 எலுமிச்சையை பிழிந்து, 1/2 கப் புதினாவை நறுக்கிப் போட்டு, ஒன்றாக கலந்து இரவு முழுவதும் ஊற வைத்து, தினமும் உணவு உட்கொள்வதற்கு 10 நிமிடத்திற்கு முன் 1 கப் குடித்து வர வேண்டும். இதனால் குறைவான அளவில் உணவை உட்கொள்ளலாம், செரிமானம் மேம்படும் மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் குறைந்து தொப்பையும் குறையும்.

Originally posted 2016-04-17 07:58:48. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *