மயக்கம், தலைச்சுற்றல், வயிற்று போக்கு நீங்க மாதுளம் பழம் சாப்பிடுங்கள்

மாதுளம்பழத்தின் பூ பிஞ்சு, காய், இலை, பட்டை, பழம், தோல் முதலிவையும் மருத்துவ தன்மை வாய்ந்தது.

நாம் உண்டு வரும் பழங்கள் எல்லாம் மருத்துவ தன்மை வாய்ந்தது. அதில் மாதுளை ஒரு அற்புத மருத்துவ தன்மை கொண்டது. அதன் பூ பிஞ்சு, காய், இலை, பட்டை, பழம், தோல் முதலிவையும் மருத்துவ தன்மை வாய்ந்தது ஆகும். மாதுளையின் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்துப் பாகங்களும் மருத்துவதில் பயன்படுபவை.

மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள் :

பூ, பழத்தோல், பட்டை ஆகியவை துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பழம், இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. பூ, பழத்தோல் ஆகியவை ரத்தப் போக்கைக் கட்டப்படுத்தும். துவர்ப்புச் சுவையைக் கூட்டும். பழம் குளிர்ச்சியை உண்டாக்கும். பூ, பசியைத் தூண்டும். மரப்பட்டை, வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். விதை, ஆண்மையைப் பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும். பல நோய்களையும் கட்டுப்படுத்தி உடலை வளமாக்க மாதுளை பயன்படுகின்றது.

மயக்கம், தலைச்சுற்றல், தொண்டை வறட்சி, புளிப்புயேப்பம், வாந்தி தீர :

மாதுளம் பழச் சாறு, 100 மி.லி. அளவு காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். பிரயாணத்தின் போது சிலருக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படலாம். அப்போதும் இதனை சாப்பிட்டு பயன் பெறலாம்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி நிற்க :

மாதுளம் பழச்சாறு குடிப்பது உடனே பயன் விளைவிக்கும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு ரத்த சோகையும் ஏற்படக்கூடும். இதற்கும் மாதுளம் பழச்சாறு உகந்தது. நோய்வாய்ப்பட்ட பின்னர் ஏற்படும் உடல் சோர்வைப் போக்க மாதுளம் பழச்சாற்றுடன் சிறிதளவு கல்கண்டு சேர்த்துச் சாப்பிட குணம் பெற முடியும்.

வயிற்றுப் போக்கு, பேதி தீர :

மாதுளம் பிஞ்சை நன்றாக அரைத்து, பசைபோலச் செய்து கொண்டு, நெல்லிக்காய் அளவு, ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளைகள் இவ்வாறு செய்யலாம்.

ரத்த மூலம் கட்டுப்பட :

பூச்சாறு 15 மி.லி. சிறிதளவு கற்கண்டு சேர்த்து, காலையில் மட்டும் குடித்து வர வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வரலாம்.

உடல் குளிர்ச்சி பெற :

ஒரு டம்ளர் அளவு பழச்சாற்றை, தேவையான அளவு கற்கண்டு சேர்த்து, காலையில் குடிக்க வேண்டும்.

வாய்ப்புண், தொண்டை ரணம், வலி தீர :

மாதுளம் பூக்களைச் சேகரித்து, உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை 1/2 தேக்கரண்டி யளவுல், 1/4 லிட்டர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, வாய் கொப்புளித்து வர வேண்டும்.

மாதுளம் பற்கள் :

பல்லுக்கு உதாரணமாக மாதுளை விதைகளைக் கூறுவார்கள். நன்கு, முற்றிய மாதுளம் பழத்தை உடைத்தால் உள்ளே முத்துப் பற்கள் போன்று அழகாக அடுக்கப்பட்டிருக்கும் விதைகள் அனைவரையும் அதிசயிக்க வைக்கும். பற்களையும், ஈறுகளையும், பாதுகாக்க மாதுளம் பழம் சாப்பிடவது மிகவும் அவசியமானதாகும்.

Originally posted 2016-04-16 17:26:10. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *