ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி உள்ளவரா? கர்ப்பம் தரிக்க முயல்கிறீர்களா?

தாய்மை பெண்களின் வாழ்வை வசந்தமாக்குகின்றது. ஒரு பெண் தாயாக தகுதி அடைந்து விட்டாள் என்பதை உலகுக்கும், ஏன் அவளுக்குமே அறிவிக்கும் ஒரு சமிக்கையே மாதவிடாய் சுழற்சி. எனவே மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் வாழ்வில் ஒரு பகுதியாகவே உள்ளது. உங்களுக்கு மாதவிடாய் வரவில்லை எனில், உங்களுக்கு கர்ப்பம் தரிக்கும் சாத்தியம் இல்லை என்று பொருள் கொள்ளலாம்.

மாதவிடாய் என்பது, ஒரு பெண்ணிற்கு 28 நாட்கள் அல்லது 35 நாட்களுக்கு ஒரு முறை வரும் சுழற்சி ஆகும். இந்த சுழற்சி உங்களுக்கு வழக்கமாக வரவில்லை எனில் நீங்கள் ஒரு மகப்பேறு மருத்துவரை கலந்து ஆலோசிப்பது நல்லது. அவர் உங்களுடைய வழக்கமான தேதியின் படி நீங்கள் மாதவிடாய் அடைய உங்களுக்கு உதவக்கூடும்.

ஒரு மாதத்திற்கும் மேலாக உங்களுக்கு மாதவிடாய் வரவில்லை எனில், அது கண்டிப்பாக PCOD அல்லது பல்பையுரு கருப்பை நோய் போன்ற சில முக்கியப் பிரச்சனைகளின் காரணமாக இருக்கலாம். இந்த நோயே மலட்டுத்தன்மை தோன்ற ஒரு பொதுவான காரணமாக விளங்குகின்றது.

இந்த பல்பையுரு கருப்பை நோய் (PCOD) பெண்களை கடுமையாக பாதிக்கின்றது. அது அவளுடைய கருப்பையில் பல சிறிய கட்டிகளை உருவாக்குகின்றது. இதன் காரணமாக பெண்களுடைய மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படுகின்றது.

நீங்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்களில் கர்ப்பம் தரிக்க முயற்சி செய்தால், கண்டிப்பாக தொடர்ந்து படியுங்கள். இங்கே கூறப்பட்ட ஒரு சில எளிய குறிப்புகளைப் பயன்படுத்தி உங்களுடைய மாதவிடாய் சுழற்சியை சீராக்கி, கர்ப்பம் தரிக்கும் சந்தர்பத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். தாய்மையைப் போற்றுங்கள்.

நன்றாக உணவை உட்கொள்ளுங்கள்
சத்தான மற்றும் சமச்சீரான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியமானது ஆகும். கலோரிகள் அதிகமான மற்றும் சர்க்கரை மிகுந்த உணவை விடுத்து, அதிக புரோட்டீன்கள் மற்றும் வைட்டமின்கள் மிகுந்த, கலோரிகள் குறைவான, மிகவும் வண்ணமயமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். சமச்சீரான உணவு, உங்களுடைய மாதவிடாய் சுழற்சியை சரியான பாதையில் திரும்பச் செலுத்தி நீங்கள் மீண்டும் வேகமாக கருத்தரிக்க உங்களுக்கு உதவும்.

உங்களுடைய எடை ஆரோக்கியமான அளவில் உள்ளதா?
மிகவும் குறைந்த அளவிலான உடல் கொழுப்பு, உங்களுடைய ஈஸ்ட்ரோஜன் அளவை குறைத்து விடும். அது உங்களுடைய மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும். அதே நேரத்தில், அதிக அளவிலான உடல் எடையும் உடல் ஆரோக்கியத்தை கண்டிப்பாக பாதிக்கும். அதிக உடல்பருமன் நீங்கள் தாய்மை அடையும் வாய்ப்பை கண்டிப்பாக குறைக்கும். எனவே நீங்கள் சீரான உடற்பயிற்சியை மேற்கொண்டு ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

நீங்கள் ஏன் இயற்கையான உட்பொருட்களை உட்கொள்ளக் கூடாது ?
உங்களுடைய ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை சீராக்க எண்ணற்ற வழிகள் உள்ளன என்பது தெரியுமா?. பெருஞ்சீரகம், எள், அன்னாசி மற்றும் பப்பாளிப் பழம் போன்ற சில உணவுகளின் உதவியுடன், உங்களுடைய சீரற்ற மாதவிடாய் சுழற்சியை சீராக்க முடியும். இந்த இயற்கை முறைகள் நீங்கள் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் கருத்தரிக்க உங்களுக்கு உதவுகின்றன.

வழக்கமான மற்றும் மிதமான உடற்பயிற்சி
நீங்கள் வழக்கமாக செய்து வரும் உடற்பயிற்சியானது நீங்கள் கர்ப்பமுறும் சந்தர்பத்தை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா. மறுபுறம், மிகவும் கடுமையான உடற்பயிற்சியானது, ஒரு இறுக்கத்தை உருவாக்கி மாதவிடாய் சுழற்சியை அதிகமாக பாதிக்கும். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் பொழுது, அதிகமான உடற்பயிற்சி உங்கள் உடல் நலனை பாதிக்காதா என்ன?

உங்களுடைய மாதவிடாய் சுழற்சியின் தேதியை தெரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் எளிதாக கர்ப்பம் தரிக்க ஏதுவாக, உங்களுடைய மாதவிடய் சுழற்சியை கணக்கிட்டு அதற்கேற்ப உடலுறவு கொள்வது மிகவும் சிறந்தது என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என நினைக்கின்றேன். நீங்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் அவதியுற்ற போதிலும், உங்களுடைய மாதவிடாயின் அறிகுறிகளை சரியாக கவனித்து அதற்கேற்ப செயலாற்றுவதன் மூலம் நீங்கள் எளிதாக கர்ப்பம் அடையலாம்.

Originally posted 2016-04-10 06:13:40. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *