குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளைப் பற்றிய சில வியப்பூட்டும் உண்மைகள்!

குறைப்பிரசவம் என்பது 37 வாரத்திற்குள் குழந்தை பிறப்பதைக் குறிக்கும். இப்படி குழந்தை பிறந்தால் பலரும் அஞ்சுவார்கள். ஆனால் உண்மையில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட திறமைகள் அதிகமாக இருக்கும். மேலும் அவர்களின் சிந்தனை எப்போதும் வித்தியாசமாகவும், நம்மை வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும்.

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் வளர வளர அவர்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இதுப்போன்று ஏராளமான விஷயங்கள் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளிடம் உள்ளது.

இங்கு குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளைப் பற்றிய சில சுவாரஸ்யமான மற்றும் வியப்பூட்டும் உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

ஆரோக்கியமானவர்கள்

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமானவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் அவர்கள் பிறந்த சில மாதங்கள் நன்கு கண்காணிக்கப்படுவார்கள். இதனால் அவர்கள் வளர வளர சாதாரண குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் ஆரோக்கியமானவர்களாக இருப்பார்கள்.

புத்திசாலி

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் குறைப்பிரசவத்தில் பிறந்தவர். இந்த ஒரு வாக்கியமே பலவற்றை நமக்கு வெளிப்படுத்தும். இருப்பினும், ஆய்வில் சாதாரண குழந்தைகளை விட, குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் மூளை வளர்ச்சி சிறப்பாக இருப்பது தெரிய வந்துள்ளது.

நிறைய திறமைகள்

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குள் ஏராளமான திறமைகள் இருக்கும். அதிலும் 80 சதவீத குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குள் திறமைகள் அதிகம் இருப்பதோடு, சாதாரண குழந்தைகளை விட தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள்.

கற்பனை வளமிக்கவர்கள்

கற்பனை என்ற வரும் போது, குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக அளவில் இருக்கும். அது மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி.

சிறந்த உடன்பிறப்புக்களாக இருப்பர்

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் சிறந்த உடன்பிறப்புக்களாக இருப்பர். ஏனெனில் இவர்கள் சிறுவயதில் அதிக அக்கறை மற்றும் பாசத்துடன் வளர்க்கப்பட்டிருப்பதால், அவர்களுக்குள் அந்த அன்பும், பாசமும், அக்கறையும் அதிகமாகவே இருக்கும்.

பேச்சுத் திறமை கொண்டவர்கள்

ஆய்வுகளும் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் நன்கு பேசும் திறமைக் கொண்டவர்களாக கூறுகின்றன. ஆனால் அறிவியல்ரீதியாக இது முழுமையாக நிரூபிக்கப்படாவிட்டாலும், பெரும்பாலான குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் இயற்கையாகவே நல்ல பேச்சாளர்களாக இருக்கின்றனர்.

கூடுதல் படைப்பாற்றல் கொண்டவர்கள்

நம் அனைவருக்குமே படைப்பாற்றல் திறன் அதிகம் இருக்கும். ஆனால் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், நம்மை விட அவர்களுக்கு படைப்பாற்றல் இன்னும் கூடுதலாக இருக்கும்.
[img]http://tamil.boldsky.com/img/2016/04/01-1459510702-7-prematurebaby.jpg[/img]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *