எப்படி சாப்பிடணும்!

பசியோடு சாப்பிட்டு, பசியோடு எழுவது தான், உடலுக்கு நாம் செய்யும் சிறந்த தொண்டு என்கிறது மருத்துவம். அளவுக்கு அதிகமாக உண்டால் நோய் வரும் ஆயுள் குறையும். எனவே, வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.

பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால், உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. உணவில் சீரகம் சேர்ப்பதால், உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து, காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால், உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.

கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன், கை, கால், வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே, உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது, பே கூடாது, படிக்கக் கூடாது, இடது கையை கீழே ஊண்டக் கூடாது. தொலைக்காட்சி பார்க்கக் கூடாது. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு, வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.

காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது. உணவு உண்ணும் போது, உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.

சாப்பிடும் போது, தட்டை கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. ஒரே நேரத்தில் பல வித பழங்களை சாப்பிடக் கூடாது. எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெண்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. அதே போல, முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது.

Originally posted 2016-03-18 18:28:44. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *