மகளிரின் உடல் ரீதியான பாதிப்புகள்

மாதவிடாய் என்பதே ஒரு பெண் தன் வாழ்க்கையில் உடல் ரீதியாக சந்திக்கும் மிகப்பெரிய மாற்றமாகும். பொதுவாக 9 முதல் 17 வயதிற்குள் ஒரு பெண் பருவமடைந்து விடுவாள். சில பெண்கள் அதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தாலும் சில பெண்களுக்கு அது ஒரு சிம்ம சொப்பனம் தான். அதனை சந்திக்க அவர்கள் நடுங்கித் தான் போவார்கள்.

இனப்பெருக்க மண்டலத்தை பற்றியும் வயது அதிகரிக்கும் போது ஏற்படும் மாற்றங்களை பற்றியும் சில பெண்கள் தங்கள் அறியாமையை வெளிக்காட்டுவார்கள். இதனால் மாதவிடாயும் பருவமடைதலும் அவர்களுக்கு ஒரு புரியாத புதிராக விளங்கும்.

பருவமடைதல் என்பது உடல் ரீதியாக பல மாற்றங்களை உண்டாக்கும். மாதவிடாய், உங்கள் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். இக்காலத்தில் தான் உங்கள் மார்பகங்கள் வளர்ச்சி அடையும். உங்கள் ஒட்டு மொத்த உடலின் அமைப்பிலும் வளர்ச்சியிலும் மாற்றங்கள் ஏற்படும். கூந்தல் வளர்ச்சியையும் கூட எதிர்ப்பார்க்கலாம்.

இதுவே இக்காலத்தில் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்கள். இக்காலத்தில் பெண்களுக்கு முகத்தில் பருக்கள் வருவது இயல்பு தான். மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்பாடு மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பருக்கள் ஒரு வார காலம் அல்லது அதற்கு குறைவான காலத்திலேயே மறைந்து விடும். ஆனால் அனைத்து பெண்களுக்கும் இது ஏற்படுவதில்லை.

மாதவிலக்குக்கு முன் ஏற்படும் அறிகுறிகள் (PMS – ப்ரீ மென்ஸ்சுரல் சிம்ப்டம்ஸ்) என்பது அநேகமாக அனைத்து பெண்களுக்கும் அனுபவிக்கும் ஒன்றாகும். மாதவிலக்கு என்பது ஹார்மோன் சம்பந்தமாக ஏற்படும் மாற்றங்கள். அதனால் மாதவிலக்கின் போது ஏற்படும் மாற்றங்களும் அதிகம்.
மாதவிலக்குக்கு முன் ஏற்படும் சில அறிகுறிகளை பற்றி இப்போது பார்க்கலாம்:
* மார்பகங்கள் மென்மையாகுதல் அல்லது மார்பகங்களில் வலி
* எரிச்சல் அல்லது காரணமில்லாத கோபம்
* ஒரு வித சோகம்
* மன அழுத்தம் / பதற்றம்
* உணவுகளின் மீது தீவிர நாட்டம்

மேற்கூறிய மாறுதல்களை நீங்கள் அனுபவிக்க கூடும். சில பெண்களுக்கு மாதந்திர மாதவிடாயின் போது குமட்டல் மற்றும் வாந்தியும் கூட ஏற்படும். இத்தகைய மாற்றங்கள் பல நேரம் சந்தோஷங்களை அளிக்காது. இக்காலம் பெண்களுக்கு கடுமையானதாக இருக்கும்.

நீங்கள் வீட்டையும் வேலையையும் சேர்ந்து கவனிக்க வேண்டுமென்றால், உங்கள் நிலைமை இன்னும் கஷ்டம் தான். ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் போதுமான விழிப்புணர்வு இருந்தால், மாதவிடாயின் போது ஏற்பாடு மாற்றங்களை சுலபமாக சமாளிக்கலாம்.

இக்காலத்தில், பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகள் மற்றும் கால்சியம், புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ள உணவுகளை உட்கொண்டால், பல பிரச்சனைகள் தீரும்.

வைட்டமின் ஈ மாத்திரைகளை உட்கொண்டால், மாதவிலக்குக்கு முன் ஏற்படும் அறிகுறிகளின் தாக்கங்கள் குறையும். மாதவிடாயின் போது ஏற்படும் மாற்றங்களை சந்திக்க முன் கூட்டியே தயாராக இருங்கள்.

Originally posted 2016-03-14 05:10:41. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *