உடல் எடை குறைக்கனுமா? இதோ கவர்ச்சி அழகி கிம் கர்தாஷியனின் புரோட்டீன் டயட்!

கிம் கர்தாஷியனின், உலகின் பிரபல மாடல். ஜீரோ சைஸ் தான் அழகு என்று கூறிக் கொண்டிருந்த நேரத்தில் கொழு கொழு உடல் வாகு தான் அழகு என ஃபேஷன் உலகையே அதிர வைத்தார். இவருக்கு பிறகு நிறைய பேர் இவரைப் போலவே உடல்வாகினை பின்பற்ற ஆரம்பித்தனர்.

சமீபத்தில் கிம் கர்தாஷியனுக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு அதிகரித்த உடல் பருமனை கிம் கர்தாஷியன் புரோட்டீன் டயட்டை பின்பற்றி உடல் எடைய குறைத்து வருகிறார். ஆராய்ச்சியாளர்களும் இது உடல் எடையை குறைக்க சிறந்த டயட் என கூறிவருகிறார்கள்.

கிம் கர்தாஷியன்

உலகின் பிரபல மாடல் அழகி கிம் கர்தாஷியன் குழந்தை பிறந்த பிறகு அதிகரித்த உடலை குறைக்க புரோட்டீன் டயட்டை பின்பற்றி உடல் எடையை குறைத்து வருகிறார்.

ஆய்வாளர்கள்

சமீபத்தில் ஆய்வாளர்களும் உடல் எடையை குறைப்பதற்கு புரோட்டீன் டயட் ஓர் முக்கிய கீ-யாக செயல்படுகிறது என கூறியுள்ளனர்.

பசியை குறைக்கும்

புரோட்டீன் டயட் இயல்பாகவே பசியைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளதால், இது உடல் எடையை வெகுவாக குறைக்க உதவுகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பர்து பல்கலைக்கழகம்

இன்டியானாவில் உள்ள பர்து பல்கலைக்கழகம் (Purdue University) ஆராய்ச்சியாளர்கள் புரோட்டீன் டயட் பசியைக் குறைத்து உடலில் அதிகப்படியாக கலோரிகள் சேராத வண்ணம் செய்கிறது. இதனால், உடல் பருமன் சீராக குறைய துவங்குகிறது என கூறினர்.

பெரியளவில்?

டயட்டிஷியன், உணவு மற்றும் உடல் எடை ஆய்வாளர்கள் இந்த புரோட்டீன் டயட் உடல் எடையை சீராக குறைக்க உதவுகிறது என கூறினும். இதுக் குறித்து பெரியளவில் எந்த ஆய்வுகளும் இதுவரை நடத்தப்படவில்லை. சிறியளவில் மட்டுமே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

எவ்வளவு உட்கொள்ளலாம்

அமிர்தமாக இருப்பினும் அளவுக்கு மீறினால் நஞ்சு தான். அளவுக்கு அதிகமாக புரோட்டீன் உட்கொண்டால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா எனவும் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

புரதச்சத்து நிறைந்த உணவுகள்

முட்டை, நட்ஸ், சிக்கன், சீஸ், தயிர், மீன், பால் போன்ற உணவுகளில் புரதம் அதிகளவில் இருக்கிறது.

கார்ப்ஸ் உணவுகள்

சிலர் உடல் எடையை குறைக்கிறேன் என்று புரதம் (நட்ஸ்) மற்றும் நார்ச்சத்து (தானிய, பயிர்) உணவுகளை அதிகரித்துக் கொண்டு கார்ப்ஸ் உணவுகளை அறவே குறைத்துக் கொள்வார்கள். உடற்சக்திக்கு கார்ப்ஸ் உணவும் தேவை என்பதை மறந்துவிட வேண்டாம்.

[img]http://tamil.boldsky.com/img/2016/03/05-1457155291-1wanttoloseweightfollowkimkardashianshighproteindiets.jpg[/img]

Originally posted 2016-03-14 03:12:12. Republished by Tamil Medical Tips

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *